Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொங்குபாளையம் ஊராட்சி தலைவர் கே.மூர்த்தி தனது ஆதரவாளர்களான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முருகன், சரவணசாமி, தங்கவேல் மற்றும் தி.மு.க. நிர்வாகி கணேசன், தே.மு.தி.க. நிர்வாகி ராஜாமணி உள்பட 50 பேருடன் தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் ஆனந்தன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். விழாவில் ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மாநகராட்சி 1–வது மண்டலத்தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் பொங்குபாளையம் ஊராட்சி தலைவர் சுலோச்சனாவடிவேல், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைசெயலாளர் பாலசுப்பிரமணி, பொங்குபாளையம் ஊராட்சி துணைத்தலைவர் கருப்புசாமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஐஸ்வர்யாமகாராஜ், பாலசுப்பிரமணியம், தாமோதரன், வேலுசாமி, செல்வராஜ் மற்றும் மயில்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: