Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
குழித்துறை அருகே நூதன முறையில் கடத்திய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடி பறக்கும் படை சிறப்பு தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யது அலி, டிரைவர் ஜாண்பிரைட் ஆகியோர் நேற்று காலை மார்த்தாண்டம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால், அந்த லோடு ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றது. 
உடனே, அதிகாரிகள் லோடு ஆட்டோவை துரத்தி சென்று, குழித்துறை அருகே கல்லுக்கெட்டி பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். ஆட்டோ டிரைவரிடம் விசாரித்த போது, அதில் மிட்டாய் பொருட்கள் இருப்பதாக கூறினார். 
அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் சாக்கு மூட்டைகளை சோதனையிட்ட போது, அதில் மிட்டாய் பொருட் களுடன் போதை புகையிலை பொருட்கள், பாக்கு பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக்கூறப் படுகிறது. 
இவை நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளையில் உள்ள ஒரு கடைக்கு கொண்டு செல்வதாக டிரைவர் கூறினார். 
கேரளாவில் இத்தகைய புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. எனவே, இத்தகைய போதை பொருட்களை களியக்கா விளையில் பதுக்கி வைத்து விட்டு அங்கிருந்து  கேரளாவுக்கு கடத்தி செல்ல, எடுத்து வந்ததாக தெரிகிறது. 

இதைத்தொடர்ந்து, அதிகாரிகள், நூதன முறையில்  கடத்திய போதை புகையிலை பொருட்களுடன் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து களியக்காவிளை போலீசில் ஒப்படைத்தனர். மேலும், லோடு ஆட்டோ டிரைவர் நாகர்கோவில், கோட்டாறு பகுதியை சேர்ந்த டிரைவர் கணேசும் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

0 comments: