Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by Unknown   

நடிகர் அஜீத் குடியிருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததால், போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்கள் அவருடைய வீட்டை தீவிரமாக சோதனையிட்டனர்.

பின்னர் அது வெறும் வதந்தி என்பது தெரியவந்தது. இந்நிலையில் இன்று தொலைபேசி மூலம் இந்த வதந்தியை கிளப்பிய மர்ம மனிதனை அதிரடியாக போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிடிபட்ட அந்த மர்ம நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். போலீஸாரின் அதிரடி நடவடிக்கைக்கு அஜீத் ரசிகர்கள் போலீசாருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் வதந்தி கிளப்பிய நபருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என அவர்கள் போலீசாரிடம் வலியுறுத்தி வருகின்றனர். பிடிபட்ட நபரின் தகவல் குறித்து போலீஸார் இதுவரை எவ்வித தகவல்களும் கூறவில்லை.

0 comments: