Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
திருவொற்றியூர், : திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தில் படவேட்டம்மன் கோயிலில் கடந்த 12ம் தேதி ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜை, அபிஷேகம், அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதிஉலா நடந்தது.
நேற்று ஜீவன்லால் நகரில் உள்ள பொன்னியம்மன் கோயிலில் இருந்து 1008 பெண்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி பால்குட ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.  விரதமிருந்த பக்தர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

0 comments: