Wednesday, September 03, 2014
கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழையின் காரணமாக கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைப் புரண்டு ஓடியது. இதனால் நீலகண்ட நாராயணகட்டி கிராமத்தை சுற்றி வெள்ளம் சூழ்ந்திருந்தது. போக்குவரத்து முற்றிலும் முடங்கி கிராம மக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். நாளுக்கு நாள் வெள்ளம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனால் 9 மாத கர்ப்பிணியாக இருந்த எல்லவ்வா-விற்கு பயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்தால் குழந்தையை நல்லவிதமாக பெற்றெடுக்க முடியாது என கருதினார். எனவே அவர் ஆற்றை கடக்க முடிவு செய்தார். ஆனால் அவருக்கோ நீச்சல் தெரியாது. நீச்சல் தெரியாமல் இந்த விபரீத முடிவு வேண்டாம் என குடும்பத்தாரும் கிராமத்தாரும் எதிர்த்தனர்.
ஆற்றில் அளவுக்கு அதிகமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் படகு ஓட்டுநர்களும் ஆற்றில் இறங்க மறுத்தனர். ஆனால் தனது முடிவில் பிடிவாதமாக இருந்த எல்லவ்வா, கடந்த ஜூலை 31-ம் தேதி தனது தம்பி லட்சுமண், தந்தை ஹனுமப்பா, உறவினர்கள் சிலரின் உதவியுடன் துணிந்து ஆற்றில் இறங்கினார். 16 அடி ஆழமுள்ள கிருஷ்ணா ஆற்றில் கயிறு மற்றும் சுரைக்குடுவையை கட்டிக்கொட்டு துணிச்சலுடன் குதித்தார். 700 மீட்டர் நீளமுள்ள ஆற்றை சுமார் 120 நிமிடங்கள் மூச்சிறைக்க நீந்தி கடந்துள்ளார். குளிரிலும்,உடல் வலியிலும் துடித்த அவரைக் கண்டு மறுகரையில் நின்றவர்கள் கடுமையாக அதிர்ந்து போயினர்.
ஆண் குழந்தைக்கு தாயான துணிச்சல் பெண்:
அவருக்கு கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மிகவும் மெலிந்திருந்த அவருடைய உடலில் போதிய ரத்தம் இல்லாததால் மருத்துவர்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் எல்லவ்வாவை அவரது குடும்பத்தினர் ரெய்ச்சூர் மாவட்டம் லிங்கசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அறுவை சிகிச்சையின் மூலம் 4 கிலோ எடையுள்ள ஆண்குழந்தை பிறந்தது.
இந்த சாகச முயற்சி குறித்து கூறிய எல்லாவ்வா தன் கணவர் பாலப்பாவுக்கு அவர் இரண்டாவது மனைவி என்றார். முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் தான் என்னை திருமணம் செய்தார். எனக்கும் திருமணாகி 4 ஆண்டுகள் ஆயிற்று. எனவே தற்போது நான் கர்ப்பமானதும் குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்க நினைத்ததாக தெரிவித்தார்.
நீச்சல் தெரியாமலே நீந்திய சாகசம்:
தமக்கு அவ்வளவாக நீச்சல் தெரியாது என்ற எல்லாவ்வா துணி துவைக்க மட்டுமே ஆற்றுக்கு போயிருப்பதாக கூறினார். ஆனாலும் கணவர் மற்றும் பிறக்க போகும் குழந்தைக்காக ஆற்றைக் கடந்து மருத்துவமனைக்கு செல்ல முடிவெடுத்ததாக கூறினார். ஆற்றில் குதிப்பதற்கு முன்னால் கடவுளையும் கணவரையும் மனதில் நினைத்து கொண்டதாக தெரிவித்தார்.
நீந்தும் போது மிக குளிராகவும் பயமாகவும் இருந்ததாக கூறிய அவர், தனது சகோதரனும், தந்தையும் நீந்துவதற்கு சொல்லி தந்தார்கள் என்றார். அவர்கள் சொற்படியே தாம் நீந்தி வந்ததாகவும் தெரிவித்தார். தடுமாறும் நேரங்களில் இருவரும் பிடித்து கொண்டதாகவும் கூறியுள்ளார். தமது மனதில் குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்ததாக குறிப்பிட்டார்.
எல்லாவ்வாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் பிரசவத்தின் போது எல்லவ்வா மிகவும் சோர்வடைந்து இருந்ததாக கூறினார். அறுவை சிகிச்சையின் மூலமாகவே குழந்தையையும் தாயையும் உயிரோடு காப்பாற்ற முடியும் என்ற நிலையில் இருந்ததாலேயே அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவர் கூறினார். இந்த பெண்ணின் துணிச்சலை கேட்டு பிரம்மித்ததாக கூறியுள்ள மருத்தவர், அவரது குடும்ப சூழ்நிலையை மற்றம் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு அவரிடம் கட்டணம் வசூலிப்பதில்லை என முடிவெடுத்திப்பதாக தெரிவித்தார்.
எல்லவ்வா 9 மாத கர்ப்பிணியாக ஆற்றில் நீந்தி வந்தபோது சுற்றியிருந்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர். அதனை மறுக்கரையில் இருந்து கவனித்த சிலர் அங்கிருந்த கன்னட நாளிதழின் நிருபருக்கு தகவல் கொடுதுள்ளனர். அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து துணிச்சல்மிக்க எல்லவ்வாவை படமெடுத்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் ம...
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கு மற்றுமோர் நவீன கருவி அறிமுகம். ஹர்ஷமித்ரா மருத்துவமனை கடந்த 12 ஆண்டுகளாக திர...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment