Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நடத்தினர்.
இக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டுமென்று வலியுறுத்தினார். மேலும், தமிழகத்தில் மதுவினால் ஏற்படக்கூடிய குற்றங்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது என்றும், சிறுவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் குடிப்பழக்கம் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வரக்கூடிய உள்ளாட்சி இடைத்தேர்தலில் மதுக்கொள்கையை முன் வைத்து போட்டியிடத் தயாரா என்று அதிமுகவுக்கு அவர் கேள்வி எழுப்பினார். மதுவினால் ஏற்படக் கூடிய தீமைகளை எடுத்துரைக்கும் விதமாக பல விழிப்புணர்வுப் பதாகைகளை இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வைத்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பாமக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

0 comments: