Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
எட்டு நாள் வயதுடைய சிசுவொன்றை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்க முயன்ற சிசுவின் பெற்றோர் உட்பட 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப் பட்டுள்ளனர். மோதரை பொலிஸ¤க்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப் பட்ட தேடுதலில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த பெண் கடந்த 24ம் திகதி ராகம ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தையொன்றை பெற்றுள்ளார். மோதரை பிரதேசத்தை சேர்ந்த இரு பெண்கள் தாயின் விருப்பத்துடன் 50 ஆயிரம் ரூபாவுக்கு சிசுவை வாங்கி உஸ்வெடாகெய்யா பகுதியில் வாழும் தம்பதியொன்றுக்கு விற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான தகவல் கிடைத்ததையடுத்து சிசுவின் தாய், தந்தை, குழந்தையை பணம் கொடுத்து வங்கிய தம்பதி மற்றும் குழந்தையை விற்க உதவிய இரு பெண்கள் ஆகியோர் கைது செய்யப் பட்டனர்.
சந்தேக நபர்கள் நேற்று அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

0 comments: