Showing posts with label srilanka. Show all posts
Showing posts with label srilanka. Show all posts

Saturday, May 02, 2015

On Saturday, May 02, 2015 by Unknown in ,    
பெண் பார்க்கும் படலத்திற்காக பெண் வீட்டுக்குச் சென்ற மாப்பிளை அங்கு வைத்து கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
 
இலங்கை யாழ்ப்பாணத்தை அடுத்த மீசாலையில் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் நபர் ஒருவர், ஏராளமான சீதனத்துடன் தரகர் மூலம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பதற்காக தனது உறவினர்கள் சகிதம் பெண் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
 
பெண் வீட்டுக்குச் சென்றவரை அங்கு நின்ற பெண்ணின் தூரத்து உறவினர் ஒருவர் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனெனில் காப்புறுதி முகவராக தொழில் புரிந்த அவரது மகளை ஏற்கனவே அந்த நபர் காதலித்து ஏமாற்றியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையில் அங்கு பெரும் சண்டை நடந்ததுள்ளது.
 
மேலும், அந்த குறித்த நபர் ஏற்கனவே ஏராளமான பெண்களுடன் மன்மத விளையாட்டுக்களை புரிந்து அவர்களைக் காதலிப்பதாக கூறி ஏமாற்றியவர் என தெரியவந்தது. எனவே, பெண் பார்க்க வந்தவரை நெருங்கிய உறவினர், அங்கு நின்றவர்களுக்கு தெரிவிக்கவே பெண் வீட்டுக்காரர்கள் மாப்பிளையை தாக்கியுள்ளனர்.
 
அடிமேல் அடிவிழ அவர் தனது கைப்பேசியை அங்கேயே போட்டுவிட்டு தனது தாய், தந்தை உறவினர்களை விட்டுவிட்டு ஓடித் தப்பியுள்ளார். பெண்ணின் உறவினர்களிடத்தில் சிக்கிய மாப்பிளையின் உறவுகள் பலத்த கெஞ்சல்களுக்கு மத்தியில் தாக்குதலில் இருந்து தப்பி வெளியேறியுள்ளனர்

Friday, April 17, 2015

On Friday, April 17, 2015 by Unknown in ,    
இலங்கையில் இருந்து இந்தியா செல்பவர்கள் முன்கூட்டியே விசா பிரயாண அனுமதி எடுக்க வேண்டியதில்லை என்றும், அங்கு சென்றவுடன் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவுக்கு இலங்கையர்கள் விசா இல்லாத பயண முறை அமலுக்கு வந்தது

 
இப்போது இது நடைமுறைக்கு வந்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தினால் புதனன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
 
கடந்த மாதம் 14 ஆம் திகதி இந்தியப் பிரதமர் அறிவித்ததற்கு அமைவாக ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் உல்லாசப் பயணிகளான இலங்கையர்கள், மின்னியல் பிரயாண அனுமதியின் ஊடாக இந்தியாவுக்குச் சென்றதன் பின்னர் விசா பெற்றுக்கொள்ள முடியும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
 
ஆயினும், இராஜதந்திர அலுவலக மட்டத்திலான கடவுச்சீட்டைக் கொண்டிருப்பவர்களும், பாகிஸ்தானிய வம்சாவளி இலங்கை பிரஜைகளும், இந்தியாவில் தொழில் செய்பவர்கள், அங்கு வசிக்கின்ற இலங்கைப் பிரஜைகள் ஆகியோர் இந்த இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க முடியாது என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒரு தடவை மாத்திரமே பிரயாணம் செய்யக் கூடிய இந்த முறையின் மூலம் பெறுகின்ற விசா 30 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் இந்தியத் தூதரகம் கூறியிருக்கின்றது.
 
இந்தப் பிரயாண நடைமுறையின் மூலம் பெங்களுர், சென்னை, டெல்லி, கோவா, ஹைதராபாத், கொச்சி, கொல்கொட்டா, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய 9 விமான நிலையங்களின் ஊடாக மாத்திரமே இந்தியாவுக்குச் செல்லக் கூடியதாக இருக்கும். எனினும் இந்த நடைமுறையின் மூலம் விசா பெறுபவர்கள், இந்தியாவில் இருந்து வெளியேறும்போது கட்டுப்பாடுகளின்றி, எந்தவொரு விமானத்தளத்தின் ஊடாகவும் அங்கிருந்து பிரயாணத்தை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
 
இந்தப் புதிய நடைமுறை இலங்கைப் பயணிகளுக்கு பல வழிகளில் நன்மை பயக்கத்தக்கதாக அமைந்துள்ளது என்று, கொழும்பில் உள்ள கிளாச்சிக் ட்ரவல்ஸ் என்ற பிரயாண முகவர் நிலையத்தின் சிரேஸ்ட முகாமையாளர் ரிம்ஸான் மொகமட் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
பொதுவாக, இந்தியாவுக்கு உல்லாசப் பயணிகளாகச் செல்பவர்கள், தமது நிதி நிலைமையை உறுதிப்படுத்துவதற்காக, வங்கிக் கணக்கின் விபரங்களுக்குரிய ஆவணம் உள்ளிட்ட சில ஆவணங்களைத் தமது விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
 
ஆனால் அந்த நடைமுறை இந்தப் புதிய ஏற்பாட்டில் இல்லையென்று தெரிவித்தார். எனினும், இது சிங்கப்பூரில் உள்ள நடைமுறையைப் போலல்லாமல், மின்னியல் பிரயாண அனுமதியைப் பெற்றுச் செல்ல வேண்டியுள்ளது என்றும், சாதாரண மக்கள், பிரயாண முகவர்களை நாட வேண்டிய தேவை உள்ளது என்றும் ரிம்ஸான் மொகமட்தெரிவித்தார்

Friday, April 10, 2015

On Friday, April 10, 2015 by Unknown in ,    
இலங்கையின் வடக்கே கனகராயன்குளம் பகுதியில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டிருந்த சிறுமி சரண்யாவின் மரணத்தில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்ததையடுத்து, வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக அந்த சிறுமியின் சடலம் 38 நாட்களின் பின்னர் இன்று திங்கட்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு, மீள் மருத்துவ பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

 
கனகராயன்குளம் கொல்லர்புளியங்குளத்தைச் சேர்ந்த செல்வராசா சரண்யா என்ற 16 வயது பாடசாலை மாணவி பெற்றோரை இழந்து தனது அம்மம்மாவுடன் வசித்து வந்தபோது, சகோதரன் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்ற அவர், கடந்த பிப்ரவரி மாதம் திடீர் சுகவீனமடைந்து, மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிளிநொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் திடீரென அங்கு மரணித்தார்.
 
இவருடைய மரணத்துக்கான காரணத்தை அறிவதற்காக மருத்துவ பரிசோதனை நடத்திய கிளிநொச்சி வைத்தியர், சிறுமி சரண்யா கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததற்கான அடையாளம் அவரது உடலில் காணப்பட்டதாக, தங்களிடம் தெரிவித்ததாகவும், இதனையடுத்தே அவருடைய மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகவும் காவல்துறையிடமும் ஏனைய அதிகாரிகளிடமும் முறையிட்டதாக சிறுமியின் பாட்டி சீதையம்மா மற்றும் கொல்லர்புளியங்குளம் மாதர் அபிவிருத்திச் சங்க முக்கியஸ்தரும் தெரிவித்திருந்தனர்.
 
சிறுமி சரண்யாவின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டிருந்த போதிலும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பல்வேறு பொது அமைப்புக்களும் பெண்கள் உரிமைக்கான அமைப்புக்களும் குற்றம் சுமத்தியிருந்த நிலையிலேயே வவுனியா நீதிமன்றம் சிறுமி சரண்யாவின் சடலத்தைத் தோண்டி எடுத்து மீண்டும் மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
 
இதனைத் தொடர்ந்து திங்களன்று, வவுனியா மாவட்ட நீதவான் மொகமட் ரிஸ்வான், யாழ் மாவட்ட சட்ட வைத்திய நிபுணர் டாக்டர் உருத்திரபதி மயூரகன் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில் சிறுமி சரண்யாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. சடலத்தை சிறுமியின் பாட்டி சீதையம்மா மற்றும் சகோதரன் முறையான ஒருவர் ஆகியோர் அடையாளம் காட்டினர். இதனையடுத்து. சடலத்தை கொழும்புக்கு அனுப்பி சட்ட வைத்திய நிபுணரின் மருத்து பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Thursday, January 22, 2015

On Thursday, January 22, 2015 by Unknown in ,    



Share on facebookShare on twitterMore Sharing Services
முன்னாள் அதிபர் ராஜபக்சேவோல் வெளிநாடுகளில் நியமிக்கப்பட்ட 57 தூதரக அதிகாரிகளை பதவி நீக்கம் செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
 
முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே ஆட்சியில் தூதரக அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட 57 பேரில், இலங்கை வெளிநாட்டு சேவையில் பணியாற்றிய ஊழியர்களில் 10க்கும் குறைவான ஊழியர்களே தூதரக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். மற்ற அனைவரும் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது.
 
அதில், நியூயார்க்கிற்கான தூதரக துணை பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, நிரந்தர பிரதிநிதி பாலித கோஹன, துருக்கிக்கான தூதுவர் பாரதி விஜேரத்ன, ஜப்பானுக்கான தூதுவர் வசந்த கரன்னாகொட, ஆஸ்திரேலியாவுக்கான தூதுவர் திசர சமரசிங்க, சுவிடனுக்கான தூதுவர் ஓஷிடி அழகபெரும, மாலைத்தீவுக்கான தூதுவர் டிக்சக் தேல, இத்தாலிக்கான தூதுவர் கரு ஹகவத்த, இஸ்ரேலுக்கான தூதுவர் மொனால்ட் பெரேரா, தாய்லாந்துக்கான தூதுவர் சாந்த கோட்டேகொட, சிங்கப்பூருக்கான தூதுவர் பேரியல் அஸ்ரப் ஆகியோர் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட தூதுவர்களாவர்.
 
இந்நிலையில், ராஜபக்சேவால் வெளிநாடுகளில் நியமிக்கப்பட்ட 57 தூதரக அதிகாரிகள் வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் நாடு திரும்புமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சக செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Monday, January 05, 2015

On Monday, January 05, 2015 by Unknown in ,    
இலங்கையில் தமிழ் வாக்காளர்களை ராணுவம் மூலம் ராஜபக்சே அரசு அச்சுறுத்தி வருவதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திறி பால சிறிசேனா குற்றம் சாட்டியுள்ளார்.
 
இலங்கை தலைநகர் கொழும்பில் பேசிய மைத்திறி பால சிறிசேனா ”யாழ்ப்பாணத்தில் மட்டும் தேர்தலை சீர்குலைக்க 2 ஆயிரம் ராணுவ வீரர்களை ராஜபக்சே அரசு குவித்திருத்திருக்கிறது. அதுபோல பொலன்னருவ பகுதிக்கும் வீரர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். வாக்குப்பதிவை சீர்குலைக்க அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
 
கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, ’ராஜபக்சேவின் சதித் திட்டத்தை ராணுவத்திலுள்ள தங்களது ஆதரவாளர்கள் மூலம் அறிந்து கொண்டதாகவும், ராணுவ வீரர்கள் மூலம் தமிழர் பகுதிகளில் வாக்குப்பதிவை தடுப்பதே ராஜபக்சேவின் எண்ணம்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Wednesday, December 31, 2014

On Wednesday, December 31, 2014 by Unknown in ,    

Share on facebShare on twi
நடிகர் சல்மான் கான் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரம்: திமுக கண்டனம்
இலங்கையில் அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிரச்சாரம் செய்துள்ளதை வன்மையாகக் கண்டித்துள்ளது.
 
இலங்கை அதிபர் தேர்தல் ஜனவரி 8ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிபர் ராஜபக்சே 3ஆவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பொது வேட்பாளராக சிறுசேனாவை நிறுத்தியுள்ளன. இதனால் அங்கு, தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
 
இந்நிலையில், கொழும்புவில் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே நடத்திய கண்புறை அறுவை சிகிச்சைக்கான நிகழச்சியில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் பங்கேற்றார்.
 
பின்னர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்தார். நடிகர் சல்மான் கானின் இந்த செயலுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
ராஜபக்சேவுக்கு ஆதரவான பிரச்சார நிகழச்சியில் சல்மான் கான் பங்கேற்றது வன்மையாக கண்டிக்கதக்கது என திமுக அமைப்பு செயலாளர் ஜி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
 
இதனிடையே ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் சல்மான் கான் இலங்கைக்கு வரவில்லை என்று அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் மோகன் சமர நாயகே மறுப்பு தெரிவித்துள்ளார்.

Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by farook press in ,    
இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிகட்ட போரின்போது அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக சர்வதேச அமைப்பு போர் குற்ற விசாரணை நடத்த ஐ.நா. சபை உத்தரவிட்டுள்ளது.
இதற்கு இலங்கை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை முன்னாள் ராணுவ வீரர் அஜீத் ரோகணா (வயது 73) என்பவர் போர் குற்ற விசாரணையை எதிர்த்து தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
அஜீத் ரோகணா அதிபர் ராஜபக்சே அரசு பங்களா அருகே உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்பு அவர் மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஐ.நா. சபையின் முன்னாள் மனித உரிமை தலைவர் நவீபிள்ளை வற்புறுத்தல் காரணமாக இலங்கை மீது போர் குற்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் தீக்குளித்தேன் என்று கூறியுள்ளார்.

Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
எட்டு நாள் வயதுடைய சிசுவொன்றை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்க முயன்ற சிசுவின் பெற்றோர் உட்பட 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப் பட்டுள்ளனர். மோதரை பொலிஸ¤க்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப் பட்ட தேடுதலில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த பெண் கடந்த 24ம் திகதி ராகம ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தையொன்றை பெற்றுள்ளார். மோதரை பிரதேசத்தை சேர்ந்த இரு பெண்கள் தாயின் விருப்பத்துடன் 50 ஆயிரம் ரூபாவுக்கு சிசுவை வாங்கி உஸ்வெடாகெய்யா பகுதியில் வாழும் தம்பதியொன்றுக்கு விற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான தகவல் கிடைத்ததையடுத்து சிசுவின் தாய், தந்தை, குழந்தையை பணம் கொடுத்து வங்கிய தம்பதி மற்றும் குழந்தையை விற்க உதவிய இரு பெண்கள் ஆகியோர் கைது செய்யப் பட்டனர்.
சந்தேக நபர்கள் நேற்று அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by farook press in ,    
புதுக்கடை நீதிமன்றத்துக்கு அருகாமையில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில், ஒருவர் பலியானதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்பமொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலின் போது கூறிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தில் உயிரிழந்தவர், குறித்த குடும்பத்தின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரவில் சிகிச்சை பெற்று வருவதாக, தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்ஹ தெரிவித்தார்.
On Tuesday, September 02, 2014 by farook press in ,    
லாங்கொடை பகுதிக்கு மிக அண்மையில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் அண்னன் தம்பிக்கு இடையில் இடம்பெற்ற செருப்பு சண்டை கத்திகுத்தில் போய் முடிந்துள்ளது.
இன்று காலை பலாங்கொடை பிரதேசத்தின் அண்மித்த கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 வயது அண்ணனின் செருப்பை 11 வயது தம்பி மறைத்து வைத்ததாக கூறி தொடங்கிய சண்டை கத்தி குத்தில் போய் முடிந்துள்ளது.குறித்த சம்பவத்தில் கத்தி குத்துக்கு இலக்கான 11 வயது சிறுவனின் வயிற்றுப்பகுதியில் கத்தி சிக்கிக்கொண்டதால் அறுவை சிகிற்சை மூலம் கத்தி நீக்கப்பட்டுள்ளது.
குறித்த பதினைந்து வயது சிறுவனை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் வரும் 28 ம் திகதி வரை சிறுவர் சீர்திருந்த பள்ளியில் வைக்க பலங்கொட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
On Tuesday, September 02, 2014 by farook press in ,    
குருநாகல் வாரியபொலவில் யுவதி ஒருவரால் தாக்கப்பட்ட இளைஞர் நேற்று மாலை
வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
காதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்காகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் அவரை குருநாகல் வைத்தியசாலைக்கு மேலதிக சிசிக்சைக்காக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அண்மையில் யுவதி ஒருவர் இளைஞன் ஒருவரை வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய சம்பவம் முகநூலில் வைரஸ் போன்று பரப்பப்பட்டது.
தாம் அணிந்திருந்த ஆடை குறித்து, அந்த இளைஞன் கூறிய வார்த்தைக்காகவே யுவதி அவரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் இளைஞர் எவ்வித எதிர்ப்புகளையும் அதன்போது வெளியிடவில்லை.
30 வயதான செல்வா என்ற ரொபர்ட் தாசன் சந்திரகுமார் என்ற இளைஞனே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர்.
On Tuesday, September 02, 2014 by farook press in ,    
இலங்கை முஸ்லீம்களின் விவாக, விவாகரத்துச் சட்டங்கள் பற்றிய நூல் முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியினால் இன்று வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரும், முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் தலைவருமான ஜெசீமா இஸ்மாயில் தலைமையில் கொழும்பு லக்ஷ;மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்றது.
புpரதம அதிதியா நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் கலந்து கொண்டார்.
இந் நூலின் முதற்பிரதி அமைச்சர் ரவுப் ஹக்கீமிடம் கையளிக்கப்பட்டது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பர்சான ஹணிபா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் சரியா சர்சரன்குயில் மற்றும் பயிசுன் சக்கரியா ஆகியோறும் உரையாற்றினார்கள்.
உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சுப் தலைமையில் திருத்தி எழுதியுள்ள முஸ்லீம் விவாக விவகரத்துச் சட்டம் பற்றி விரிவாகப் பேசினார்.
இச்சட்டத் சீர்திருத்தத்தை அடுத்த வருடம் ஏப்ரலில் நீதிஅமைச்சரிடம் கையளிப்பதாக தெரிவித்தார். எதிர்காலத்தில் காதீ நீதிபதி நியமனங்கள் வழங்கும் போது சட்டத்தரணிகளையே நியமித்தல் வேண்டும். நீதிஅமைச்சினால் சட்டத்தரணிகளை அரச உத்தியோகத்தர்களாக உள்வாங்கி நியமிக்க வேண்டும்.
அதற்காக கவுண்சிலின், நீதிக்குழு அவர்களுக்கான தகமை மற்றும் தபாரிப்பு நிதி வங்கியில் இட்டு அதன் பற்றுச் சீட்டை மட்டும் காதிநிதிபதியிடம் சமர்ப்பித்தல், எவ்வாறு வழக்குகளை விசாரணை செய்தல் போன்ற பல்வேறு முஸ்லீம் விவகார சட்டங்கள் பற்றி தெளிவாக





விளக்கினார்.
அத்துடன் தற்பொழுது நாட்டில் உள்ள காதீ நீதிபதிகளை தொகையை குறைத்தல் வேண்டும். மற்றும் தபாரிப்புச் சட்டம் பணம் அறவிடுதல், முஸ்லீம் விவாகம் பெண்னுக்கு 16வயது ஆண்னுக்கு 18 வயதாக இருத்தல் வேண்டும். தான் ஜம்மியத்துல் உலமா சபையுடன் கலந்தாலோசித்து இந்த சட்ட திருத்ததைச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இதனை ஒரு உப கமிட்டி இணைந்து தயார் செய்கின்றது.
பெண்கள் காதி நிதிபதியாக நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜெசீமா இஸ்மாயிலின் முஸ்லீம் பெண்கள் ஆராச்சி நிலையம் நாட்டின் பல்வேறுவகைப்பட்ட விவகரத்துப் பெற்ற பெண்கள் ஆண்கள் அவர்களது குழந்தைகள் பற்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆராய்ச்சி செய்து அவர்களுக்கு கவுண்சிலின் போன்ற விடயங்களை நூலுருவில் வெளியீட்டு சமர்ப்பித்துள்ளது.