Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
சென்னை, செப். 13–

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் மாண்டு போயிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடு இழந்து, இடப் பெயர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேத மடைந்திருக்கின்றன. பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கு ஆதரவு அளித்திடும் நோக்கில் தேசிய நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்திடுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 12–9–2014 அன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், பாதிப்புக்கு ஆளாகியிருப்போருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக “பிரதமர் தேசிய நிவாரண நிதி”க்கு 25 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்படுகிறது என்பதையும், இந்த நன் கொடைக்கான காசோலையினை கழக மாநிலங்களவை உறுப்பினர்கள் வாயிலாக பிரதமரிடம் நேரில் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

0 comments: