Thursday, September 25, 2014
மதுரையில் ஜெய்ஹிந்துபுரம், மீனாம்பிகை நகர் பகுதியில் கடந்த 19–ந் தேதி
வீட்டிற்குள் புகுந்து சகோதரர்களான கருப்புராஜ் (வயது 21), பாம்பு நாகராஜ்
(19), இவர்களை பார்க்க வந்த நண்பர் கார்த்திக்(21) ஆகிய 3 பேரும் வெட்டிக்
கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீசார்
வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட பழி வாங்கும் போட்டியில் 3 பேரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் குண்டுமணி, பிரேம், சவுந்தர் என்ற சவுந்தரபாண்டியன், அலெக்ஸ், மொட்டை மணி, எஸ்.மணி, சுடலைமுத்து, சித்திரைவேல் பாண்டியன் ஆகியோர் மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இதற்கிடையில் நண்பர் பாம்பு நாகராஜை கொலை செய்தவர்களை பழிக்குப் பழியாக கொலை செய்ய ஒரு கும்பல் திருப்பரங்குன்றம் சந்திரபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே திருப்பரங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர்.
அங்கு ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஹார்வி பட்டியைச் சேர்ந்த இளவரசன் (23), பழங்கா நத்தம் பிரபு (21), ஜெய்ஹிந்து புரம் மருது பாண்டியன் (23), பழையனூர் பாண்டி வேல் (23) ஆகியோரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்கள் 4 பேரையும் ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment