Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by Unknown in ,    

உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார்.
உலக நன்மைக்காக... வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கெங்கையம்மன் கோவில் அருகே கடந்த 4 மாதத்திற்கு முன் ஒரு சாமியார் வந்தார். அவர் கடந்த சில மாதங்களாக அங்குள்ள கோவில் அருகே உள்ள தோப்பில் தங்கினார்.
அந்த சாமியார் பெயர், ஊர் விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை. சாமியார் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகள் பேசுகிறார். சத்துவாச்சாரியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் சாமியாரிடம் ஆசி பெற்று வந்தனர். பிரத்தியங்கரா தேவி அருள் பெற்றவர் என கூறிக்கொண்ட சாமியார் பல்வேறு பூஜைகள் செய்து வந்தார். தற்போது வேலூரில் மழை பெய்ததால் அவர் வ.உ.சி.நகர் 4–வது தெருவில் உள்ள வீட்டில் தங்கி உள்ளார்.
இந்த நிலையில் உலக நன்மைக்காக அவர் வணங்கும் பிரத்தியங்கரா தேவியை வேண்டி தனது வீட்டில் சிறப்பு பூஜை செய்து மிளகாய் பொடி அபிஷேகம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். அதற்காக பக்தர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.
மிளகாய் பொடி அதன்படி நேற்று மிளகாய் பொடி அபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்தன. சாமியார் பிரத்தியங்கரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.
பின்னர் ஒரு அண்டாவில் அமர்ந்தார். 31 கிலோ மிளகாய் பொடி கரைக்கப்பட்ட தண்ணீரை சாமியார் மீது பக்தர்கள் ஊற்றி அபிஷேகம் செய்தனர். சுமார் 150–க்கும் மேற்பட்ட பக்தர்கள் மிளகாய் பொடி கரைத்த தண்ணீரை எடுத்து சாமியாருக்கு அபிஷேகம் செய்தனர்.
மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்த அதிசய சாமியாரை பற்றி தகவல் அறிந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து வந்து பார்த்து ஆச்சரியமடைந்து சாமியாரிடம் ஆசி பெற்று சென்றனர்.
இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 comments: