Thursday, September 25, 2014

On Thursday, September 25, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம் காங்கயம் முத்தூர் பேரூராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பேரூராட்சி அலுவலக கட்டிடத்தையும், வணிக வளாக கட்டிடத்தையும், நிழற்குடையையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் பேரூராட்சி அலுவலகத்தில் பணிகளை தொடங்கி வைத்தார். காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் முத்தூர் பேரூராட்சி தலைவர் செல்வ விநாயக முத்துக்குமார், செயல் அலுவலர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்த கொண்டனர்.
இதேபோல் புதிய நீர் தேக்க தொட்டியையும் முதல்வர் திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பேரூராட்சி கருங்கல் மேட்டில் ரூ.34.80 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை முதல்வர் திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீர் குழாயினை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
குன்னத்தூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

0 comments: