Thursday, September 25, 2014

On Thursday, September 25, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் வையாபுரி (வயது 70). இவரது மகன் கதிரவன் (வயது 35). இவரது மகள் சந்தியா (பெர் மாற்றப்பட்டுள்ளது). சந்தியா அருகிலுள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு சந்தியாவின் தாயார் தனலட்சுமி இறந்துவிட்டார்.
அவரது இறப்புக்கு பின்னர் சந்தியா மனமுடைந்த நிலையில் இருந்தார். ஆறுதலாக சந்தியா பள்ளிக்கு சென்று வந்தார். ஆனால் அவரது தாத்தா வையாபுரி மற்றும் தந்தை கதிரவன் 2 பேரும் சேர்ந்து சந்தியாவை பள்ளிக்கு செல்ல அனுமதிக்கவில்லை. அதற்கு மாறாக வீட்டில் துணி துவைக்கவும், சமையல் செய்யவும் கூறி துன்புறுத்தி வந்தனர்.
சிறுமியான சந்தியா வால் அவர்களது தொல்லைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் மனஉளைச் சலுக்கு ஆளானார். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கணேஷ் பாபுவை தொடர்பு கொண்ட சிறுமி சந்தியா தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் தெரிவித்தார்.
அதனடிப்படையில் கணேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் சந்தியாவின் வீட்டில் ஆய்வு நடத்தி சந்தியாவின் தந்தை மற்றும் தாத்தாவை எச்சரித்து வந்தனர். மீண்டும் 2 நாட்கள் கழித்து ஆய்வுக்கு சென்ற போது தொடர்ந்து சிறுமிக்கு தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கணேஷ் பாபு உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி சந்தியாவை கொடுமைப்படுத்தியதாக கதிரவன் மற்றும் வையாபுரி மீது புகார் அளித்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தநாயகி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். புகார் உண்மை என தெரிய வந்ததை தொடர்ந்து கதிரவன் மற்றும் வையாபுரியை போலீசார் கைது செய்து உடுமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

0 comments: