Friday, September 26, 2014
இந்திய அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்க வேண்டும் என பாரதிய ஜனதா அரசு முயற்சிப்பது இந்திய ஒற்றுமைக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியதாகும், இது புத்திசாலித்தனமானதல்ல என்று
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கௌரவத் தலைவர்
பேராசிரியர் அருணன் கூறினார்.
திருப்பூரில் வியாழக்கிழமை
இந்திய அரசியல் சட்டத்தின் மதச்சார்பின்மையும், 370வது சட்டப் பிரிவும் என்ற
சிறப்புக் கருத்தர
ம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில்
அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு குறித்து பேராசிரியர் அருணன் பேசியதாவது: இந்தியாவின் சௌந்தர்ய பூமியாக காஷ்மீர் இருந்தது. ஆனால் இப்போது காஷ்மீர் சிக்கலில் சிக்கி நிற்கிறது.காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானின் பகுதியாக இருந்தது கிடையாது. அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு, காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்திருக்கும் முக்கியப் பிரிவாக இருக்கிறது.அதை நீக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி சொல்வது இந்திய ஒற்றுமை மீது நம்பிக்கை இல்லாமல் அதை பிளக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டதாகும். இப்படிச் செய்வதன் மூலம் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள் என பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறோம்.ஒரே இந்தியா எனச் சொல்லி தாங்கள்தான் ஒற்றுமைக்காக நிற்பதாக பாஜவினர் பம்மாத்து செய்கின்றனர். அவர்களது நிலைபாடு புத்திசாலித்தனமானதல்ல. 370வது பிரிவை நீக்கினால் காஷ்மீர் பிரச்சனையை சர்வதேசப் பிரச்சையாக பாகிஸ்தான் மாற்றிவிடும். பாகிஸ்தானும், பிரிவினைவாதிகளும் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
370வது சட்டப் பிரிவால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலம் வாங்க முடியாது என்று கூறுகின்றனர். இன்றைக்கு பாஜகவினர் அதானிக்கும், அம்பானிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கை விற்றுவிட வேண்டும் என துடிக்கின்றனர். காஷ்மீரில் மட்டுமல்ல வேறு சில மாநிலங்களிலும் இது போன்ற உரிமை வேறு சில அரசியல் சட்டப் பிரிவுகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
370வது பிரிவை நீக்க வேண்டும் என்பதற்காக பெண் உரிமை, பெண் சொத்துரிமை போன்ற பலபிரச்சனைகளில் வம்பாக முடிச்சுப் போட்டு பேசுகிறார்கள். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33சதவிகிதம் இட ஒதுக்கீடு பற்றி மூச்சுக்கூட விடாமல் காஷ்மீரில் பெண்ணுரிமை பற்றி பேசுகிறார்கள். இவர்களுக்கு பெண் உரிமை பிரச்சனையில் உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் காஷ்மீர் சட்டமன்றத்திலே இப்போதே குரல் கொடுக்கலாமே?
370வது பிரிவை நீக்க வேண்டும் என்பது வரலாற்று கண்ணோட்டத்திலும், மாநில சுயாட்சிக் கண்ணோட்டத்திலும் தவறானது. மக்கள் ஒற்றுமை ஓங்க வேண்டும், தேச ஒற்றுமை வளர வேண்டும் என விரும்புவோர் மார்க்சிஸ்ட் கட்சிக்கு செவி சாய்க்க வேண்டும் என்றார் பேராசிரியர அருணன்.
மதசார்பின்மை அவசியம்
"இந்திய அரசியல் சட்டத்தின் மதச்சார்பின்மை" என்ற தலைப்பில்மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பின
ர்
மதுக்கூர் ராமலிங்கம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நம் நாட்டில் மதச்சார்பின்மை என்பதை பலரும் தவறாக அர்த்தம் கொள்கின்றனர். எல்லா மதங்களையும் சமமாகப் பாவிப்பது என்று செயல்படுகின்றனர். ஆனால் மதச்சார்பின்மை என்றால் எல்லா மதங்களில் இருந்தும் அரசும், அரசியலும் விலகி இருப்பது என்றுதான் அர்த்தம். இன்று
செவ்வாய் கிரகத்துக்கு
மங்கள்யா
ன்
விண்கலம் அனுப்பும் சாதனையை இந்திய விஞ்ஞானிகள் படைத்திருக்கிறார்கள்.அந்த இஸ்ரோவின் தலைவர் ராதாகிருஷ்ணன் மதநம்பிக்கை உடையவர். அவர் மதநம்பிக்கை கொண்டிருப்பது பிரச்சனை இல்லை.ஆனால் ஒவ்வொரு முறையும் விண்கலம் செலுத்தும்போது, அவர் திருப்பதி கோயிலுக்குச் சென்று அந்த ராக்கெட் மாதிரியை வைத்து வழிபாடு நடத்திவிட்டு வருவது சரியல்ல. இஸ்லாமிய, கிறிஸ்துவ,புத்த, சீக்கிய மத நம்பிக்கை இருப்பவர்கள் இதுபோல் செய்தால் சரியாக இருக்குமா? அரசு செலவில் அரசுத் துறையில் செயல்படுத்தும் ஒரு திட்டத்தில் யாருடைய மதநம்பிக்கையையும் பயன்படுத்தக் கூடாது.
இன்று மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மதச்சார்பின்மை மிகப்பெரிய கேள்விக் குறியாகி நிற்கிறது. மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட்டால்தான் நம் நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க முடியும் என்றார் மதுக்கூர் ராமலிங்கம்.
தத்துவப் போராட்டம்
அறிமுக உரை ஆற்றிய மார்க்சிஸ்ட் ஆசிரியர்குழு உறுப்பினர் பேராசிரியர் சந்திரா கூறியதாவது: திராவிட இயக்கம் இன்றைக்கு தத்துவார்த்தரீதியாக தோல்வி அடைந்து செயல்பட முடியாத நிலையில் போய் நிற்கிறது. சாதிய, மதவாத எதிர்ப்புப் போராட்டத்தைத் தத்துவார்த்தரீதியாக நடத்தக்கூடிய வல்லமை கொண்டதாக மார்க்சிஸ்ட் கட்சி திகழ்கிறது.
ஆர்எஸ்எஸ் பின்புலத்துடன் செயல்படும் பாஜக ஆட்சி கல்வியை இந்தியமயமாக்க வேண்டும் எனச் சொல்லி இந்து மயம் ஆக்க முயற்சிக்கிறது. கல்வித்துறையில் அறிவியலுக்கு முற்றிலும் புறம்பான கல்வியைக் கொடுக்க முயல்கின்றனர். மிக நுணுக்கமாக சின்னச்சின்ன விசயங்களில் இந்துத்துவ சக்திகள் தங்கள் கருத்தைத் திணிக்கின்றனர்.
இதற்கு எதிராக சரியான நிலைபாட்டை சுயமாக கற்றுத் தெரிந்து செயல்பட மார்க்சிஸ்ட் தத்துவ மாத இதழ் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்காகவும் அமராவதி அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர் மு....
-
தமிழக-கேரள எல்லையில் உள்ள உடுமலை வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியுள்ளனரா என க்யூ பிரிவு போலீஸார், வனத் துறையினர் தீவிர விசாரணை...
-
The 10 th mid-year Chemical Research Society of India (CRSI) Symposium in Chemistry was jointly organized by National Ins...
-
திருச்சி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மண்டல சாலை மறியல் போராட்டம் நடை...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
கர்நாடக உயர் நீதிமன்றம்| கோப்புப் படம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 1991-96 காலக்கட்டத்தில் ஹைதராபாத் திராட்சை தோட்டம் மூலம...
0 comments:
Post a Comment