Friday, September 26, 2014

On Friday, September 26, 2014 by Unknown in ,    
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவின்போது ஆபாச நடனம் ஆடியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் அரசு வக்கீல் கந்தசாமி தெரிவித்தார்.
மதுரையை சேர்ந்த வக்கீல் ஜெபக்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய் துள்ளார். அதில் கூறப் பட்டுள்ளதாவது:–
கடந்த 2012–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் வடஇந்திய நடிகர்–நடிகைகள் கலந்து கொண்டு ஆபாச நடனம் ஆடினர். அவர்களது செயல்பாடு பார்த்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. இது கலாச்சாரத்திற்கு எதிரானது.
இதுகுறித்து நடவடிக்கை கேட்டு போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல் கந்தசாமி ஆஜராகி, மனுதாரர் புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி கிருபாகரன் மனு மீதான விசாரணையை முடித்து வைத்தார்.

0 comments: