Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
புழல் ஜெயிலில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், நைஜீரியா நாட்டு கைதிகளிடம் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையை அடுத்துள்ள புழல் ஜெயிலில் நேற்று இரவு, சிறைத்துறை டி.ஐ.ஜி. (பொறுப்பு) ராஜேந்திரன், சூப்பிரண்டு அன்பழகன், ஜெயிலர் இளவரசன் ஆகியோர் ரோந்து சுற்றினர். அப்போது உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டிருந்த நைஜீரியா நாட்டு கைதிகள் 3 பேர் தனித்தனியாக செல்போன்களில் பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் 3 பேரும், அதிகாரிகளை பார்த்ததும் போனை மறைத்தனர். அவர்கள் 3 பேரையும் கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள், அவர்களிடம் இருந்து 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுபற்றி புழல் போலீசில், சிறைத்துறை சூப்பிரண்டு அன்பழகன் புகார் செய்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப் பதிவு செய்து அந்த 3 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் பெயர் ரொனால்டோ (வயது 27), ஜேம்ஸ் (28), தாமஸ் (30) ஆகும். நைஜீரியா நாட்டை சேர்ந்த அந்த 3 பேரும் 2012–ம் ஆண்டு போதைப் பொருட்கள் கடத்தியதாக சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள்.
ஜெயிலுக்குள் இருக்கும் அந்த 3 பேருக்கும் செல்போன்கள் கிடைத்தது எப்படி? யாருடன் தொடர்பு கொண்டனர். அதில் சதித் திட்டம் எதுவும் உண்டா? என்றும் புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

*வேளச்சேரி பஜனை கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்த ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த கோயினங்(47) என்பவர் நேற்று குடியிருப்பின் மாடியில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
* திருமுல்லைவாயல் லலிதாம்பாள் தெருவை சேர்ந்த ஆறுமுகம்(70) என்பவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் சாலையை கடந்து சென்றபோது வேன் மோதியதில் உயிரிழந்தார்.
*ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நடராஜ்(60). டெய்லரான இவர் கடந்த 2–ந்தேதி பீட்டர்ஸ் சாலையை கடந்து சென்றபோது மோட்டார்சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
*ஆவடி கோவர்த்தனகிரி பாரதியார் தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி(70). நேற்று மாட்டு வண்டியில் ஆவடிக்கு சென்றபோது பின்னால் வந்த மினிலாரி மோதியதில் உயிரிழந்தார்.
* வந்தவாசி அடுத்த வழுதூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் விநாயகம்(30) என்பவர் நேற்று சென்னை சிவில் சப்ளை அலுவலகத்திற்கு லாரியில் சர்க்கரை ஏற்றிக்கொண்டு சென்றார். ஊரப்பாக்கம் ஜி,.எஸ்.டி சாலையில் வந்தபோது லாரி முன்னால் சென்ற மற்றொரு லாரி மீது மோதியதில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
*சிங்கபெருமாள் மல்ரோசாபுரம் பகுதியை சேர்ந்தவர் நியூட்டன்(38). மோட்டார்சைக்கிளில் ஒட்டேரி சிக்னல் அருகே சென்றபோது நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் படுகாயம் அடைந்தார்.
*பாண்டிபஜார் பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்த நெல்லை மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த தன்ராஜ் என்பவர்(52) நேற்று அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றபோது லாரி மோதி உயிரிழந்தார்.
*நங்கநல்லூர் எம்.எம்.டி.சி காலனியை சேர்ந்த குப்புசாமி மனைவி பாலசரஸ்வதி(60) நேற்று காலை கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றபோது மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

*துரைப்பாக்கம், நீலாங்கரை, உள்பட பல பகுதிகளில் உள்ள கடைகளில் சோழிங்கநல்லூர் சுகாதார அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி சட்டவிரோதமாக விற்பனை செய்த 100 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
*பெரியமேடு பகுதியில் வந்த மாநகர பஸ்சில் பயணிகளிடம் திருட முயன்ற ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த 3 பெண்களை பெரியமேடு போலீசார் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்த பேரம்மா(40) என்பவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
*எழும்பூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் பணிபுரிந்து வரும் சிபு(25) என்பவர் தரமணி ரெயில் நிலைய தண்டவாளத்தில் மது அருந்தி கொண்டிருந்த மர்ம நபர்களை கண்டித்தார். அப்போது சிபு மீது கல்வீசி தாக்கிவிட்டு தப்பி ஓடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
*மந்தைவெளிபாக்கம் தெற்கு கால்வாய் கரை பகுதியை சேர்ந்தவர் யுவராஜ்(39) பெயிண்டரான இவர் திருமணம் ஆகாத விரக்தியில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
*விருகம்பாக்கம் இந்திராநகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து(44). கார்பெண்டர். வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததை அவரது மனைவி கண்டித்ததால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

0 comments: