Saturday, September 27, 2014

On Saturday, September 27, 2014 by farook press in ,    
தாராபுரம் பஸ் நிலையத்தில் மாணவியிடம் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
தனியார் கல்லூரி 
கேரள மாநிலம் குமுளி தாலுகா ரோசாப்பு கண்டம் மேட்டில் வீட்டை சேர்ந்த அஜ்மல்கான் என்பவரது மகன் முகமது சுனைல் (வயது 22). இவர் தாராபுரம் அண்ணா நகரில் தங்கி திருப்பூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் டிப்ளமோ என்ஜினீயரிங் 3–ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று மாலையில் கல்லூரி முடிந்ததும் அங்கிருந்து பஸ்சில் தாராபுரம் பஸ் நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது அதே கல்லூரியில் ஆங்கில இலக்கியம் 2–வது ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரிடம், முகமது சுனையில் செல்போன் பேட்டரியை கொடுத்து விட்டு பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
3 பேர் கொண்ட கும்பல் 
இதற்கிடையில் அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் முகமது சுனைலிடம் தனியாக பேச வேண்டும் என்று அவரை ஒதுக்குப்புறமாக அழைத்து சென்று அந்த கும்பல் பயங்கரமாக தாக்கியது. அப்போது அங்கிருந்த பயணிகளும், பஸ் நிலையத்தில் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசாரும் அந்த மாணவரை மீட்டு, அந்த கும்பலை பிடிக்க முயன்ற போது அந்த கும்பலில் ஒருவர் சிக்கினார். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட வாலிபரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் தாராபுரம் கோட்டை மேட்டை சேர்ந்த கர்ணன் என்பவரது மகன் சேதுபதி (21) என்றும், இவர் பழனியில் உள்ள கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவருடன் சேர்ந்து தாக்கிய பிரதாப், துர்க்கையண்ணன் ஆகியோரையும் போலீசார் பிடித்து வந்தனர்.
வழக்குப்பதிவு

பின்னர் முகமது சுனையில் தாராபுரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்–இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் கோபால் ஆகியோர் விசாரித்து சேதுபதி, பிரதாப், மற்றும் துர்க்கையண்ணன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் காயம் அடைந்த முகமது சுனைலுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

0 comments: