Saturday, September 27, 2014

On Saturday, September 27, 2014 by farook press in ,    
ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் தி.மு.க.வினர் கருப்புக் கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தனர்.
தமிழ் இனப்படுகொலையில் ஈடுபட்டதுடன், வரலாறு காணாத அளவுக்கு மனித உரிமை மீறல்களை அரங்கேற்றிய இலங்கை அதிபர் ராஜபக்சே, ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொள்வதை கண்டித்து டெசோ கூட்ட தீர்மானத்தின்படி, உலக தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் தி.மு.க.வினர் கருப்புச்சட்டை அணிந்து நேற்று கண்டனம் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் மு.பெ.சாமிநாதன் கருப்புச்சட்டை அணிந்து கறுப்புக்கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தார். மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் கருப்புச்சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
இதேபோல் திருப்பூர் மாநகர தி.மு.க. சார்பில் திருப்பூர் பெரியார், அண்ணா சிலை அருகே மாநகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் தி.மு.க.வினர் ராஜபக்சேவை கண்டித்து அனைவரும் கருப்புச்சட்டை அணிந்து துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர். மேலும் திருப்பூர் மாநகர வீதிகளில் கருப்புக்கொடி ஏற்றினர். மேலும் தி.மு.க.வினர் பலர் தங்களுடைய வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, மாநகர துணைச் செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜ், நிர்வாகிகள் மேங்கோ பழனிச்சாமி, நல்லி சண்முகசுந்தரம் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

0 comments: