Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது ஒரு நாள் கிரிகெட் போட்டி இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காமில் இன்று மதியம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பீ்ல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியைச் சேர்ந்த குக்- ஹேல்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் முறையே 9, 6 ரன்களில் புவனேஸ்வர் குமார் பந்தில் வீச்சில் வீழ்ந்தனர்.
3-வது வீரராக களம் இறங்கிய பேலன்ஸ் 7 ரன்னில் முகமது சமி பந்தில் வீச்சில் பெவிலியன் திரும்பினார். இங்கிலாந்து அணி 23 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
4-வது விக்கெட்டுக்கு ரூட்டுடன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடினார்கள். ஆனால் அதிரடியாக ரன் குவிக்க இயலவில்லை. இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 28.2 ஓவரில் 103 ரன்னாக இருக்கும்போது மோர்கன் 32 ரன்னில் ஆட்டம் இழந்தார். ரூட் 44 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
அதன்பின் வந்த மொயீன் அலியைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 49.3 ஓவரில் 206 ரன்கள் எடுத்து சுருண்டது. மொயீன் அலி சிறப்பாக விளையாடி 50 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இந்திய அணி தரப்பில் சமி 3 விக்கெட்டும், புவனேஸ்குமார், ஜடேஜா தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

0 comments: