Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
தாராபுரம் அகஸ்தீஸ்வர் கோவில் உள்பட 5 கோவில்களுக்கு சொந்தமான விளைநிலங்கள் குத்தகைக்கு ஏலம் விடப்பட்டது.
கோவில் நிலங்கள்
தாராபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களான அகஸ்தீஸ்வரர் கோவில், கல்யாணராமர் கோவில், உத்திர வீரராகவபெருமாள் கோவில், கிருஷ்ணன் கோவில் உள்பட 5 கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தாராபுரம் வடக்கு, கொளத்துப்பாளையம், தாராபுரம் தெற்கு, கல்யாணராமர் படுகை, செப்பு குண்டான் வயல், காரமேடு, சாமிவயல், கிருஷ்ணகோவில் வயல், கலர் வயல், பெரியகாரமேடு, கண்ணன் வயல், பிள்ளையார் முக்காணி, சாம்பான் வயல், ஆதிகாரம்பிள்ளைவயல், தாளமுக்காணி, தோப்பு வயல், தேவய்யன் வயல், காரமேடு வயல், புளியடிவயல், கருப்பக்கட்டை வயல், மஞ்சக்காணி வயல், சுள்ளுக்குத்தி வயல், ஒத்தக்குண்டல் வயல், நல்லக்காள் முக்காணி வயல் ஆகிய பகுதிகளில் உள்ளது. இந்த நிலங்களை குத்தகைக்கு எடுப்பவர்கள் நெல், கரும்பு, தென்னை, மற்றும் காய்கறிகள் செய்துள்ளனர். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்படுகிறது. அதன்படி மேற்கண்ட கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் நேற்று கல்யாண ராமர் கோவிலில் வைத்து ஏலம் விடப்பட்டது.
ரூ.5.32 லட்சம்
இந்த ஏலம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயலட்சுமி முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஏற்கனவே நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்வது வருபவர்கள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.
அதன்படி காலையில் தொடங்கிய ஏலம் மாலை வரை நடைபெற்றது. ஏலத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் போட்டிபோட்டு ஏலத்தொகையை கேட்டனர். தற்போது காய்கறி பயிர்களுக்கு ஓரளவுக்குவிலை கிடைத்துள்ளதால் ஏலத்தொகை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று கோவில் நிலங்கள் ஓராண்டு குத்தகைக்கு ரூ.5 லட்சத்து 32 ஆயிரத்து 400–க்கு ஏலம் போனது. இந்த ஏலத்தொகை அடுத்த ஆண்டு ஜூன் 30–ந் தேதி வரை மட்டும் என்றும் ஜூலை மாதம் 1–ந்தேதி மீண்டும் ஏலம் விடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments: