Saturday, September 13, 2014
முத்தூர், செப்.13–
முத்தூர் அருகே வீரசோழபுரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 44). இவர் தனது தோட்டம் அருகே பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தார்.
சம்பவத்தன்று ஈஸ்வரன், தனது ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்திருந்தார்.
அப்போது நள்ளிரவில் மர்ம கும்பல் புகுந்து பட்டியில் இருந்த 41 ஆடுகளை திருடி சென்றனர்.
அதேபோல் ஈஸ்ரவனின் அண்ணனின் ஆடுகள் பட்டியும் அருகே உள்ளது. இந்த பட்டியிலும் மர்ம கும்பல் புகுந்து அங்கிருந்த 19 ஆடுகளை திருடி சென்றுவிட்டனர்.
காலையில் ஈஸ்வரன் வந்து பார்த்த போது பட்டியில் ஆடுகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இந்த திருட்டு சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடுகளை திருடி சென்ற மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.
திருடு போன 60 ஆடுகளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் என கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...

0 comments:
Post a Comment