Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
சென்னை, செப். 13–
புதிய நீதி கட்சி நிறுவனர் தலைவர் ஏ.சி.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், பேறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி வருகிற 15–ந்தேதி தியாகராய நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அலுவலகத்தில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் சார்பு அணிகளைச் சேர்ந்தவர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை அமைப்புகள் சார்பில் சைக்கிள் பேரணிகள் நடத்தி, அண்ணாவின் உருவச்சிலை, உருவப்படத்திற்கு மாலைகள் அணிவித்து, இனிப்புகள் வழங்கி, அவரது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments: