Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
பெரம்பூர் பந்தர் கார்டன் தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ராஜி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 13). தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று பள்ளிக்கு சென்ற அவர் வீட்டு பாடம் எழுதி வராததால் ஆசிரியைகள் திட்டினர். இதனால் மனவேதனை அடைந்த ராஜி பள்ளிக்கூடத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அனுமதிக்காததால் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ராஜி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது பற்றி செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உக்கிரபாண்டி விசாரித்து வருகிறார்.

0 comments: