Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஸரஸோட்டோ பகுதியை சேர்ந்த ஒரு வீட்டில் துப்புறவுப் பணியாளராக வேலை செய்துவரும் பெண், அந்த வீட்டில் யாருமில்லாதபோது எஜமானரின் கட்டிலில் ஒரு மர்மநபர் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து, உள்ளூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தார்.

விரைந்து வந்த போலீசார், களைப்பில் நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த அந்த நபரை போட்டோ எடுத்துவிட்டு, கட்டிலின் அருகில் சென்று பார்த்தபோது, அவரது பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் பை நிறைய அந்த வீட்டில் கொள்ளையடித்த தங்க நகைகள் இருந்தன.

இதனையடுத்து, கையும் களவுமாக தூக்கத்தில் சிக்கிக் கொண்ட டியான் டேவிஸ்(29) என்ற அந்த திருடனை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

0 comments: