Saturday, September 13, 2014
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டு
மக்கள் பெருந்தன்மையுடன் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று பிரதமர்
நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
"எனது சக மக்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், ஜம்மு -
காஷ்மீரில் எதிர்பாராத அளவுக்கு பெருவெள்ளம் ஏற்பட்டு, அந்த மாநிலத்தைச்
சேர்ந்தவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
நிறைய எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது, பலர் தங்கள் இருப்பிடத்தை
இழந்துள்ளனர்.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்துக்களும் உள்கட்டமைப்புகளும் அழிந்து
போயுள்ளன. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வாழும் நமது சகோதரர்களுக்கு
இத்தகைய நெருக்கடி நிலையில், அவர்கள் வாழ்க்கை மீண்டும் புனரமைக்கப்பட நமது
உதவி பெரிதும் தேவைப்படுகிறது.
எனவே, பாதிக்கப்பட்ட நமது சகோதரர், சகோதரிகளுக்கு இத்தகைய நெருக்கடி
தருணத்தில் தோள் கொடுப்பது நமது கடமையாகும். ஆகவே, பிரதமர் தேசிய நிவாரண
நிதிக்கு நாட்டு மக்கள் அனைவரும் பெருந்தன்மையுடன் நிதியளிக்க வேண்டும்
என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார் மோடி.
இதற்கான தொகையை காசோலை, டிராஃப்ட் அல்லது ரொக்கம் ஆகிய முறைகளில்
அனுப்பலாம். பிரதமர் அலுவலக இணையதளம் மூலமும் நிதியளிக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் இதற்காக டிராஃப்ட் எடுத்தால் எந்த விதக்
கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் அலுவலகச் செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகப் பணியாளர்கள் தங்கள் ஒருநாள் சம்பளத்தை ஜம்மு - காஷ்மீர்
நிவாரணத்திற்காக அளித்ததையடுத்து, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இந்தக்
கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment