Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by farook press in ,    
சென்னை வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ஒருவர், நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ஓட்டேரி பனந்தோப்பு ரெயில்வே காலனி மைதானம் அருகே உள்ள போலீஸ் பூத்தில் ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார். இதை அந்த பக்கமாக சென்றவர்கள் பார்த்து சென்றனர்.
சிறிது நேரத்தில் போலீஸ் பூத்தில் இருந்த இருவரும் மாயமானார்கள். ஆனால் போலீஸ் பூத்தில் மின் விளக்கு எரிந்து கொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், போலீஸ் பூத்துக்கு அருகில் சென்று பார்த்தனர்.
அப்போது பூத்தின் உள்ளே அந்த பெண்ணுடன் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், போலீஸ் பூத்தை வெளிப்புறமாக பூட்டி விட்டு ஓட்டேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் துணை கமிஷனர் சுதாகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் உடனடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதுபற்றி பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: