Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by Unknown in ,    
 

அனுப்பர்பாளையம், : அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் அவிநாசி ஸ்தலபுராண விரிவுரை ஆரம்ப விழா நேற்று நடைபெற்றது.
பதஞ்சலி வியாக்ரபாத சன்மார்க்க சங்கத்தினரின் சார்பில், நடைபெற்ற இவ்விழாவின் துவக்கமாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் கருடகம்பம் முன்புறம் ரிஷப கொடியேற்றி சிவகவி சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. முன்னதாக நேற்று காலை கோயில் வளாகத்தில் 108 சிவனடியார்கள் ஒன்றிணைந்து ஆன்மார்த்த சிவபூஜை செய்தனர். இதில், சிவபுராணம், பஞ்ச புராணம், தேவாரம் உள்ளிட்ட திருமுறைகளை இன்னிசையுடன் பாடி கூட்டு வழிபாடு நடத்தினர். குளித்தலை ராமலிங்கம் திருமுறை இன்னிசையுடன் அவிநாசி ஸ்தலபுராணம் குறித்து சொற்பொழிவாற்றினார்.
இதில், அவிநாசி, திருமுருகன்பூண்டி, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், கரூர், தேனி, சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், பாண்டிச்சேரி, பெங்களூர், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை பதஞ்சலி வியாக்ரபாத சன்மார்க்க சங்க பொறுப்பாளர்கள் திருப்பூர் சிவபாபு, திருவண்ணாமலை சிவகோவர்த் தன், திருச்சி சிவபார்த்தசாரதி மற்றும் அவிநாசி சுந்தரர் வார வழிபாட்டு குழுவினர் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
மேலும் ஒவ்வொரு ஆங்கில மாதம் முதல் வார திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் அவிநாசி ஸ்தலபுராண விரிவுரை சொற்பொழிவு நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

0 comments: