Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகர் மாவட்டட அண்ணா தி.மு.க., எம்.ஜி.ஆர்.இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காலேஜ் ரோட்டில் உள்ள சௌடாம்பிகா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயர் சு.குணசேகரன் வரவேற்று பேசினார்.மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர்கள் சம்பத்குமார், சதன் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்.
மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர்கள் சம்பத்குமார், சதன் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட கழக செயலாளரும்,வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அளித்து கொண்டு இருக்கிறார். அவர் அளிக்கும் திட்டங்களையும், சாதனைகளையும்  மக்களுக்கு விளக்கி சொல்வதற்காக இளைஞர்களுக்கு  புத்துணர்வு ஊட்டும் வகையில், எம்.ஜி.ஆர் இளைஞரணி கூட்டம் நடக்கிறது. மறைந்த கழக நிறுவனர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அணி தான் எம்.ஜி.ஆர்.இளைஞரணி. எம்.ஜி.ஆருக்கு பின்னால் அவரது ஒரே வாரிசான ஜெயலலிதா  இன்றைக்கு ஒன்றரை கோடி உறுப்பினர்கள் கொண்ட ஒரே  இயக்கமாக அண்ணா தி.மு.க.வை உருவாக்கி உள்ளார். முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளுக்கு சாட்சியாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் பல கட்சிகள் கூட்டணி அமைத்தன.மக்களை நம்பி, மக்களுக்காக ஆட்சி செய்யும் முதல்வர் தன்னந்தனியே நின்று மக்களை சந்தித்தார்.தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாகவே 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, தன்னந்தனியாக மக்களை சந்தித்து திட்டங்களை சொல்லி மாபெரும் வெற்றி பெற்றார் முதலமைச்சர் ஜெயலலிதா.
இன்றைக்கு காவிரி பிரச்சினை, முல்லை பெரியார் அணை, கச்சத்தீவு பிரச்சினை, தமிழர் பிரச்சினை என தமிழர்களின் உரிமை பிரச்சினைகளுக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று தீர்வு கண்டவர் ஜெயலலிதா.தமிழகத்தில் இன்று தனியாக ஒரு பெண்ணாக சென்று தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் பெற்று தருகிறார். வாருகிற காலங்களில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க.வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலை உருவாக வேண்டும். அதற்காக நாம் சரியாக பணியாற்றி  முதல்வர் ஜெயலலிதா மக்களுக்காக வழங்கும் திட்டங்ககளை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
மாநில இளைஞரணி செயலாளர் வி.அலெக்சாண்டர் தலைமை தாங்கி பேசியதாவது:-
இளைஞரணி நிர்வாகிகள் தினந்தோறும் முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கும் மக்கள் நலத்திட்டத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அதை மக்களிடம் எடுத்து சென்று பேச வேண்டும்,நாடாளுமன்றத் தேர்தலில் 18 வயது முடிந்த இளைய சமுதாய ஓட்டுகள் நுதல்வர் ஜெயலலிதாவிற்கே கிடைத்துள்ளன. ஒவ்வொரு ஊராக கிராமங்களுக்கும் சென்று இளைஞர்களை அண்ணா தி.மு.க.வில் சேர்க்க வேண்டும். 
முதல்வர் தினந்தோறும் மாணவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? முதியோர்க்கு என்ன செய்ய வேண்டும்? பொது மக்களுக்கு என்ன செய்ய வேண்டும். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே சிந்திக்கிறார். சிந்திப்பதை அப்படியே செயல்படுத்தி வருகிறார்.
கடந்த மூன்றாண்டுகளில் கல்விக்காக இந்தியாவிலேயே அதிக நிதி ஒதுக்கியுள்ளார். ஒவ்வொரு குடும்பத்தையும் முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார். இந்தியாவில் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளார்
இளைஞர் அணியினர் வீடு வீடாக சென்று முதல்வர் ஜெயலலிதா மக்களுக்காக செய்யும் திட்டங்களை எடுத்து கூற வேண்டும்..ஒவ்வொரு பகுதியிலும் 20 பேர் கொண்ட குழு அமைத்து பணியாற்ற வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும். இவ்வாறு அலெக்சாண்டர் பேசினார்.
தொடர்ந்து மாநில செயலாளர் அலெக்சாண்டர் உறுப்பினர் படிவத்தை வழங்கினார். கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞரணியின் 'அம்மாவின் இளைஞர் படை எழுக., எழுகவே' எனும் புத்தகத்தை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வெளியிட இளைஞரணி செயலாளர் அலக்சாண்டர் பெற்றுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில், மேயர் அ.விசாலாட்சி, கருப்பசாமி எம்.எல்.ஏ, வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான் ஆகியோர் பேசினார். மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, எம்.கண்ணப்பன்,நகரமைப்பு குழு தலைவர் அன்பகம் திருப்தி,வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஆனந்தகுமார், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், நிர்வாகிகள் பட்டுலிங்கம், பூலுவபட்டி, அட்லஸ் லோகநாதன், கலைமகள் கோபால்சாமி, உஷா ரவிக்குமார், எஸ்.பி.என்.பழனிசாமி, என்.ராஜேஷ்கண்ணா,  கவுன்சிலர்கள் செல்வம், சேகர், பிரியா சக்திவேல்,உள்ளிட்டவர்கள் டி.பார்த்திபன், எம்.ஹரிஹரசுதன்,பி.ராஜ்குமார்,கே.பி.ஜி.மகேஸ்ராம், அசோக் குமார், அவினாசி மு.சுப்பிரமணியம், அன்னூர் காளியப்பன், சௌக்கத்அலி, அமுல் கந்தசாமி, அவினாசி தொகுதி செயலாளர் சேவூர் வேலுசாமி,பூண்டி நகர செயலாளர்  விஸ்வநாதன், கண்ணபிரான், சி.பி.வசந்தாமணி,  முன்னாள் எம்.எல்.ஏ.பிரேமா ராமன், கருணாகரன், கோமதிசம்பத், சாகுல்ஹமீது, தாமோதரன்,ரஞ்சித் ரத்தினம், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, யுவராஜ் சரவணன்,வி.எம்.கோகுல், பி.கே.எஸ்.சடையப்பன், பி.லோகநாதன், ராயபுரம் சு.கேசவன்,சுந்தரம்பாள், பரமராஜன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

0 comments: