Wednesday, September 10, 2014

On Wednesday, September 10, 2014 by farook press in ,    
திருப்பூரில் வாகனங்களை ஓட்டிக் கொண்டே செல்போன் பேசிச் செல்வோர் மீது காவல் துறை மேற்கொள்ளும் நடவடிக்கையை, அதன் நோக்கம் நிறைவேறும் வகையில் முறைப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
 இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ் திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் சேசஷாய்க்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாநகரத்தில் கைப்பேசியை பயன்படுத்திக்கொண்டே வாகனம் ட்டுவதை தடுத்திடும் வகையில் ஆணையரின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இதன் மூலம் ஏராளமான சாலை விபத்துக்களை தடுத்திட முடியும். இது குறித்து இன்னும் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தரப்பினரையும் இணைத்துக் கொண்டு அதற்கான நிகழ்ச்சிகளை திட்டமிடும்போது இந்த அறிவிப்பின் நல்ல நோக்கம் முழுமையாக பூர்த்தியடைய உதவி செய்யும். 
ஆனால்நல்ல விளைவுகளை எதிர்பார்த்து காவல் ஆணையர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு சில இடங்களில் காவல்துறையினராலேயே தவறானதாகப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களில் மட்டும் பல்வேறு இடங்களில் கைப்பேசியை பயன்படுத்திக்கொண்டே இரண்டு சக்கர வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும்அவர்களது அலைபேசியை பறிமுதல் செய்வதும் நடந்துள்ளது. இதில் சாலையின் ரத்தில் வாகனத்தை நிறுத்தி அதில் அமர்ந்து கொண்டு கைப்பேசியில் பேசியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த சம்பவங்கள் நடைபெற்றுள்ள. சில இடங்களில் நாகரிகமற்ற வார்த்தைகளை காவல்துறையினர்காவல் இளைஞர் படையை சார்ந்தவர்கள் வாகன ஓட்டிகள் மீது பயன்படுத்தியுள்ளனர்.
எனவே அத்துமீறுபவர்கள் மீது நடவடிக்கை என்பதற்கு பதிலாக இது போன்ற நடவடிக்கைகள் சாலைவிபத்தை தடுக்கும் ஆணையரின் நோக்கத்தை பாதிக்கும். மேலும் இரண்டு சக்கர வாகனம் மட்டுமல்லாது,மூன்றுநான்கு சக்கர வாகனங்களை ஓட்டிச்செல்பவர்கள் கைப்பேசியை பயன்படுத்திக்கொண்டு வாகனங்களை ஓட்டிச் செல்வதும் பெரும்பகுதி விபத்துகளுக்கு காரணமாக உள்ளன. எனவே இது குறித்தும் உரிய விழிப்புணர்வும்தடுத்த நிறுத்தவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
          திருப்பூர் போன்ற வாகனப் பெருக்கம் மிகுந்த நகரத்தில்இது போன்ற அறிவிப்புகளை வெளியிடும்போது பல்வேறு இயக்கங்கள்,அமைப்புகள்தன்னார்வ நிறுவனங்கள்கல்வி நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு போதுமான அளவு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்வதும் அவசியம். எனவே ஆணையரின் நோக்கம் சிதையாமல் இருக்க காவல்துறையின்  நடவடிக்கைகளை முறைப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்வதாக கே.காமராஜ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.



0 comments: