Wednesday, September 10, 2014

On Wednesday, September 10, 2014 by Unknown in ,    
 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

அரசு கந்து வட்டியை வேறு பெயர் வைத்து முறைப்படுத்த வேண்டும். கந்து வட்டிக்கு பணம் கொடுப்பதை முழுமையாக நிறுத்தினால் பல ஏழைக் குடும்பங்கள், குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வார்கள். சாராயம் விற்கின்ற தொழிலை விட ஏழை மக்களுக்கு உதவுகின்ற இந்த தொழில் மோசமா?

தமிழகத்தில் 2 லட்சம் பேர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களினால் சொத்தே இல்லாத 1 கோடி ஏழை மக்கள் பயனடைகிறார்கள். வங்கிகள் வாங்குகின்ற வட்டி 18 சதவீதம் வரை இருந்தால், அந்த கட்டணம் இந்த கட்டணம் என்று மறைமுகமாக 24 சதவீதத்தில் வந்து நிற்கின்றது. அதுமட்டுமில்லாமல் சொந்த சொத்துக்களை அடமானம் வைத்தால் கூட மூன்றாவது இன்னொரு நபர் உத்திரவாத கையெழுத்து போட வேண்டும்.

சொத்தே இல்லாத ஏழை மக்கள் வங்கிகளிலோ, அரசு நிறுவனங்களிலோ அவசரத்துக்கு கடன் வாங்க வழியே கிடையாது. ஆனால் இவர்கள் எந்த உத்திரவாதமும் இல்லாமல் ஏழை மக்களை நம்பி அவசரத்திற்கு உதவுபவர்களாக இருகிறார்கள். மனிதாபிமானம் உள்ள நல்ல மனிதர்கள்தான் இதில் பெரும்பாலும் உள்ளார்கள். தினசரி அவசர தேவைகளுக்கு ஏழை மக்களுக்கு இதை விட்டால் வேறு வழி கிடையாது. ஏழை மக்களுக்கு எல்லா விதமான அவசர தேவைகளுக்கும் உதவுபவர்களை கடும் குற்றவாளிகளைப் போல் பார்க்கக்கூடாது.

இந்த ஏழை மக்களுக்கும், சிறு ,சிறு வியாபாரம் செய்து பிழைக்கின்ற மக்களுக்கும் அரசு அவர்களை காப்பாற்ற என்ன மாற்று ஏற்பாட்டை வைத்துள்ளது?  மாற்று வழியை சொல்லிவிட்டு குண்டர் தடுப்புச் சட்டம் பயன்படுத்துவதை பற்றி பேசுங்கள். அரசு இந்த தொழிலுக்கு அங்கீகாரம் கொடுத்து, ஒரு குழு அமைத்து வரன்முறைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

0 comments: