Sunday, September 14, 2014

On Sunday, September 14, 2014 by Unknown in ,    
உடுமலை அருகே பிஏபி வாய்க்காலில் இருந்து முதியவர் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள ஜல்லிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமானுஜம் (76). கடந்த
வெள்ளிக்கிழமை (செப்.12) முதல் ராமானுஜத்தை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், தளி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், உடுமலை நகரை ஒட்டியுள்ள எஸ்.வி. புரம் பிஏபி வாய்க்கால் ஷட்டரில் ஒரு முதியவரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. விசாரணையில், அந்த சடலம் ஜல்லிப்பட்டியைச் சேர்ந்த ராமானுஜம் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ராமானுஜத்தின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

0 comments: