Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
அனுப்பர்பாளையம், :திருப்பூர் சாய கழிவுநீரை பூஜ்ய சதவீத சுத்திகரிப்பு செய்கிற சுத்தகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் ரசாயன வாடை காற்றால் பாதிக்கப்படுவதாக போயம்பாளையம் கங்கா நகர் பொதுமக்கள் நேற்று தங்களின் வீடுகள் மற்றும் வீதிகளில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். 
திருப்பூரில் பின்ன லாடை துணிகளுக்கு சாயமி டும் சாயப்பட்டறைகள், பொது சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து, சாய கழிவுநீரை பூஜ்ய சதவீத சுத்திகரிப்பு செய்து, மீண்டும் அந்த தண்ணீரையே பயன்படுத்தும் நவீன தொழில் நுட்பத்துடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருப்பூர் போயம்பாளையம் கங்கா நகரில் சாய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. நான்கு சாயப்பட்டறைகள் இணைந்து இந்த சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துள்ளன. இந்த சாயப்பட்டறைகளில் இருந்து வெளி யேறும் சாய கழிவுநீர் குழாய்கள் மூலமாக கொண் டு செல்லப்பட்டு, கங்கா நகர் சுத்தகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் ரசாயன வாடை காற்றால் சுற்றுப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு வருவதாக கங்கா நகர் பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அனைத்து தரப்பினரும் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி கங்கா நகர் பகுதி மக்கள் நேற்று தங்கள் வீடுகள், வீதிகளில் கறுப்புக் கொடியேற்றி, திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், கங்கா நகர் சுத்தகரிப்பு நிலைய பராமரிப்பாளர்களை அழைத்து இன்று (13ம் தேதி) இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு வழங்குவதாக உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கலைந்து சென்றனர்.
 

0 comments: