Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
திருப்பூர், : திருப்பூரில் பழங்குடியினர் பொருளாதார மேம்பாடு திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தாட்கோ வங்கி மூலம் பழங்குடியினர் பொரு ளாதார மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தில் மானியம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் உள்ள நிலம் மேம்பாட்டு திட்டம், தொழில் முனை வோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான சுழல் நிதி திட்டம், பொரு ளாதார கடன் உதவி திட் டம் ஆகிய திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். இதில், நிலம் மேம்பாடு திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 55 வயது உள்ளவர்களாகவும், விவசாய தொழில் செய்பவராகவும் இருக்க வேண்டும். மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதி உடைய விண்ணப்பதாரர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள நபார்டு வங்கி வழிகாட்டுதலின் படியே மானியம் வழங்கப்படும்.தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், விண்ணப்பிப்பவர்கள் தாங்கள் தொடங்க இருக்கும் தொழிலை விண்ணப்பதாரர்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும். வாகனம் வாங்குவதற்காக ஓட்டுனர் உரிமத்துடன் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், விண்ணப் பிப்பவர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண் டும். இதில் பயணிகள் வாக னம், சரக்கு வாகனம், கனரக வாகனம் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. 
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சுழல் நிதி மற்றும் பொருளாதார கடன் உதவி திட்டத்தின் கீழ், விண்ணப்பிப்பவர்கள் பழங்குடியின மகளிர் குழுவில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், அரசு திட்டத்தில் இருந்து சுழல் நிதி மற்றும் பொருளாதார கடனுக்காக மானியம் பெற்றிருக்க கூடாது. இந்த திட்டங்கள் மூலம் பயன் பெற விரும்புபவர்கள் <http:/fast.tahdco.com> என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். 
பதிவு செய்யும் போது ரேஷன் கார்டு, இருப்பிட சான்று, சாதிச்சான்று, கல்வித்தகுதி மற்றும் வயதிற்கான ஆதார சான்று, ஓட்டுனர் உரிமம் மற்றும் டி.ஐ.என்.நம்பர் உள்ள நிறுவனத்திடம் இருந்து பெற்ற விலைப்புள்ளி, திட்ட அறிக் கை பெறப்பட்ட தேதியையும், அதற்கான இடத்தில் நிரப்பி திட்ட அறிக்கை, புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வச தியாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சென்று ரூ.20 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

0 comments: