Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by Unknown in ,    
தாராபுரம், : அரசு வழங்கும் இலவச ஆடு மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க கோரி, தாராபுரம் தாலுகா வீராட்சிமங்கலம் பகுதி மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கட்சியின் தாலுகா செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் நேற்று தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து வீராட்சிமங்கலம் பகுதி மக்கள் கூறுகையில், வீராட்சிமங்கலம், அணைக்காடு, நத்தக்காடு ஆகிய பகுதிகளில் தாழ்த்தப்பட்ட விவசாய தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து வருகிறோம். இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. இந்நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு இலவச ஆடு, மாடுகள் வழங்குவதாக அறிவிப்பு வெ ளியானது. ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் எங்கள் பகுதியில் பயனாளிகளுக்கு ஆடு, மாடுகள் வழங்கப்படவில்லை.
இதுதவிர எந்த ஒரு அரசு நலத்திட்ட உதவிகளும் எங்களுக்கு கிடைப்பதில்லை. இதுகுறித்து பலமுறை வருவாய்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் முற்றுகை போராட்டம் நடத்துகி« றாம்.
இனியும் எங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க காலம் தாழ்த்தினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் பெரிய போராட்டங்களை நடத்துவோம் என்றனர். இதை தொடர்ந்து தாசில்தார் ஆறுமுகம் மனுவை பெற்று கொண்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததையடுத்து, முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

0 comments: