Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by Unknown in ,    





தமிழகம் முழுவதும் உள்ளாட்சி காலி பதவியிடங்களுக்கான இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. அதன்படி கோவை மாநகராட்சியில் காலியாகவுள்ள மேயர் பதவிக்கான இடைத்தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், மாநகராட்சி மேயர் தேர்தல் குறித்து மாவட்ட கலெக்டர் அர்ச்சனாபட்நாயக் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிக் கூட்டம் கோவையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் பேசியதாவது: தேர்தல் தொடர்பான பிரசார வாகன அனுமதி, வானொளி விளம்பர அனுமதி, கூட்டம் நடத்துவது குறித்த சம்மந்தப்பட்ட தேர்தல் அலுவலரிடமும் முன் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே, தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கைகள் எடுப்பார்கள். மேலும் தேர்தல் புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண் வெளியிடப்படுகிறது. அதன்படி மாநகராட்சி அலுவலகத்தில் 2302323 என்ற தொலைபேசி எண்ணிலும், கலெக்டர் அலுவலகத்தில் 2300023 என்ற எண்ணில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் தொடர்புகொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம். மின்னணு இயந்திரங்களில் வாக்குச்சீட்டுகள் பொருத்தும் பணியின்போது, அனைத்து கட்சி பிரதிநிதிகள் மூலம் நடத்தப்படும். இவ்வாறு அர்ச்சனாபட்நாயக் பேசினார்.
கூட்டத்தில் வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்கள், பிரதிநிதிகள் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளையும், பிரசாரத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கு கலெக்டர் அர்ச்சனாபட்நாயக் விளக்கம் அளித்தார்.
கூட்டத்தில் தேர்தல் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட அரசு அதிகாரிகள் உட்பட அதிமுக, பாஜ, இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.

0 comments: