Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by Unknown in ,    

திருப்பூர், :திருப்பூரில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்த பெண் புரோக்கர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.அந்த வீட்டிற்கு சென்ற போலீசார்,  அங்கிருந்த திருப்பூர் அனைபாளையத்தை சேர்ந்த செல்வி (30), கல்லம்பாளையம் அன்பழகன் (27), கிருஷ்ணகிரியை சேர்ந்த நாகராஜ் (28) ஆகிய மூவரையும் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த விமலாதேவி என்ற பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட விமலாதேவியை மீட்டு, வாடகை வீட்டில் விபசாரம் செய்து வந்த பெண் புரோக்கர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

0 comments: