Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் இந்தாண்டு இயல்பை விட, 90 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூரின் ஆண்டு சராசரி மழையளவு 602.45 மி.மீ., 2012ல், 365.29 மி.மீ., 2013ல், 263.88 மி.மீ., பெய்திருந்தது. கோடை மழை சராசரி 124.20 மி.மீ., ஆனால், இந்தாண்டு 132.22 மி.மீ., பதிவானது.ஜூன் முதல் செப்., வரை பெய்யும் தென்மேற்கு பருவ மழை, முதல் இரண்டு மாதங்கள் ஏமாற்றியது. ஜூன், ஜீலை மாதங்களில், 23 மி.மீ., மழை பொழிய வேண்டும்; ஆனால், 3.4 மி.மீ., மட்டுமே பெய்தது. அதன்பின், பருவ மழை தீவிரமடைந்தது. ஆகஸ்டில் சராசரி 31.94 மி.மீ., மழை பெய்தது. நடப்பு ஆண்டு 101.83 மி.மீ., பெய்தது. செப்டம்பரில் சராசரி மழையளவு, 51.54 மி.மீ., இம்மாதம் 29ம் தேதி காலை வரை, 118.6 மி.மீ., பெய்துள்ளது.வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், 'தென்மேற்கு பருவ மழை, துவக்கத்தில் பாசன ஆதாரமாக உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்தது. அதனால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நிலப்பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், வேளாண் சாகுபடி செய்ய முடியவில்லை.கடைசி இரு மாதங்கள், இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளதால், நிலைப்பயிர்கள் மற்றும் சாகுபடி பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். புதிதாக கூடுதல் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வட கிழக்கு பருவ மழையும் பெய்தால், கூடுதல் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ள வசதியாக அமையும்,' என்றனர்.


0 comments: