Thursday, September 25, 2014

On Thursday, September 25, 2014 by farook press in ,    
திருப்பூர், செப்.25-
திருப்பூர் மாநகராட்சி 22 மற்றும் 45 வது வார்டு அண்ணா தி.மு.க.கவுன்சிலர்கள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 22 வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட  அண்ணா தி.மு.,க. வேட்பாளர்கள் கலைமகள் எம்.கோபால்சாமி, 45- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு  போட்டியிட்ட  வேட்பாளர் எம்.கண்ணப்பன் ஆகியோர் வெற்றி பெற்றதை தொடர்ந்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை ,அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:- 
நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் எந்த கட்சிகளுக்கும் இடம் தராமல் போட்டியிட்ட அனைத்து அண்ணா தி.மு.க.வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.தற்போது திருப்பூர் மாநகராட்சியில் 50 அண்ணா தி.மு.க.மாமன்ற உறுப்பினர்கள் பெற்று சாதனை படைத்துள்ளது.கடந்த 2 1/2 ஆண்டுகளில் திருப்பூர் மாநகராட்சிக்கு ரூ.330 கோடியை சிறப்பு நிதியாக அளித்து அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார்.புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மக்கள்பணி செய்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என வாத்துகிறேன்.இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
புதிய மாமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து மேயர் அ.விசாலாட்சி பேசியதாவது:​-
2008 ஆம் ஆண்டு பெயர் அளவில் அறிவிப்புடன் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றாத நிலையில் 2011 ம் ஆண்டு முன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்ற ஜெயலலிதா 2 நகராட்சிகள், 8 ஊராட்சிகளை இணைத்து 60 வார்டுகளாக உருவாக்கி 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் 60 வார்டுகளுக்கும் சமநிலையாக நிதிகளை ஒதுக்கீடு செய்து இதுவரை 330 கோடிக்கும் மேல் பணிகள் நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.தாய் உள்ளம் கொண்ட நமது தமிழக முதல்வர் மீண்டும் திருப்பூர் மாநகராட்சிக்கு நிதிகளை அள்ளி தர இருக்கிறார். அண்ணா தி.மு.க.வேட்பாளராக போட்டியிட்ட எம்.கண்ணப்பன், கலைமகள் கோபால்சாமி ஆகியோர்களின் வெற்றிக்கு இரவு பகல் பாராது வேறாக, விழுதாக இருந்து உழைத்த கழக தொண்டர்களுக்கும், அவர்களுக்கு வாக்குகளை அளித்த்ந்து மகத்தான வெற்றியை தந்த வாக்காள பெருமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு மேயர் அ .விசாலாட்சி பேசினார்.முன்னதாக ஆணையாளர் மா.அசோகன் முன்னிலை வகித்து பேசினார்.துணை மேயர் சு.குணசேகரன் வாழ்த்தி பேசினார்.
விழாவில் துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான், கிருத்திகா சோமசுந்தரம், நிலைக்குழு தலைவர்கள் அன்பகம் திருப்பதி, பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, வசந்தாமணி, பிரியா சக்திவேல், கவுன்சிலர்கள் முருகசாமி, செல்வம்,விஜயகுமார்,  அண்ணா தி,முக.பிரமுகர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 


 திருப்பூர் மாவட்ட ஊராட்சி 11வது வார்டுக்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அண்ணா தி.மு.க.உறுப்பினர் பி.கே.ராஜீ, மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடந்த பதவி ஏற்பு விழாவில் அவருக்கு தலைவர் வி.எம்.சண்முகம் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அருகில் தாராபுரம் எம்.எல்.ஏ.பொன்னுசாமி, துணைத்தலைவர் ஆனந்தகுமார், மாவட்ட கவுன்சிலர்கள் தண்ணீர்பந்தல் ப.நடராஜ், எஸ்.எம்.பழனிசாமி உள்ளிட்டவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 comments: