Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by Unknown in ,    
டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.வாக நீடிக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி: மதுரை ஐகோர்ட்டுமதுரை ஐகோர்ட்டு கிளையில் மதுரையை சேர்ந்த வக்கீல் ராதாகிருஷ்ணன் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–
ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது தனது சாதி குறித்து தவறான தகவலை தெரிவித்திருந்தார். இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டது. இதனால் எனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
பிறந்த இடத்தை அடிப்படையாக கொண்டுதான் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று தான் அரசு ஆணை உள்ளது. ஆனால் உடுமலைப்பேட்டை தாலுகாவில் பிறந்த கிருஷ்ணசாமிக்கு கோயம்புத்தூர் தெற்கு தாசில்தார் சாதி சான்றிதழ் வழங்கியுள்ளார்.
எனவே அவருக்கு வழங்கப்பட்டுள்ள சாதி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். அதன் மீது இறுதி முடிவு எடுக்கும் வரை எம்.எல்.ஏ.வாக செயல்பட டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் தடை கேட்ட வழக்கை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டனர்

0 comments: