Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by Unknown in ,    
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையை போட்டு விட்டு சென்ற வாலிபர்மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஒரு வாலிபர் பச்சிளம் ஆண் குழந்தையுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். குழந்தை பிறந்து 3 நாட்கள் ஆகிறது. எடை குறைவாக உள்ளது. மேலும் நோய் தாக்கப்பட்டுள்ளதாக கூறி அக்குழந்தையை ஆஸ்பத்திரியின் 155–வது வார்டில் சேர்த்தார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று காலை அந்த குழந்தை மட்டும் வார்டில் இருந்தது. குழந்தையை கொண்டு வந்த வாலிபரை காணவில்லை.
அப்போது அங்குள்ள ஊழியர்கள் தேடி வந்த நிலையில் ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்த அந்த வாலிபரை பிடித்தனர். குழந்தையின் தாயை அழைத்து வருவதாக கூறி சென்ற அந்த வாலிபர் இன்று காலை 10 மணி வரை திரும்பவில்லை. குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது பரமக்குடி முஸ்லிம் தெரு சைரா பானு என்ற விலாசம் கொடுத்திருந்தார்.
தனது பெயர் நிஜாம் என்றும், 2 செல்போன் எண்களையும் கொடுத்து இருந்தார். ஒரு எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது போனில் பேசிய ஆசாமி தனது பெயர் சாகுல்அமீது, புதுக்கோட்டை என்றார்.
பின்னர் அந்த வாலிபர் போலீசாரிடம் கூறியதாவது:–
எனது நண்பர்தான் நிஜாம். டிரைவராக வேலைபார்த்து வருகிறார். அவருக்கு குழந்தை இல்லை. இதனை தொடர்ந்து அவர் ஒரு குழந்தையை எடுத்து வளர்த்தார். அந்த குழந்தை எடை குறைவாக இருந்ததால் அவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்க அதிக செலவு ஆகும் என்பதால் குழந்தையை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று இரவு கொண்டு வந்துள்ளார். குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நிஜாம் குழந்தையை போட்டுவிட்டு மாயமாகிவிட்டார்.
இவ்வாறு அவர் போனில் தெரிவித்துள்ளார்.
போனில் சாகுல்அமீது கூறிய தகவல் உண்மையானதுதானா? குழந்தையை போட்டு விட்டு சென்ற நிஜாம் எங்கு சென்றார் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பச்சிளம் குழந்தையை வாலிபர் ஆஸ்பத்திரியில் போட்டுவிட்டு சென்ற சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: