Monday, December 22, 2014

On Monday, December 22, 2014 by farook press in ,    


திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பிக் பஜார் வளாகத்தில் நடைபெற்றது.முகாமிற்கு 45-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எம்.கண்ணப்பன் முன்னிலை வகித்தார். திருப்பூர் பிக்-பஜார் கிளை மேலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். ரத்ததான முகாமினை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் தொடக்கி வைத்தார்.முகாமில் பிக் பஜார் ஊழியர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட 50 பேர் ரத்த தானம் கொடுத்தனர். இதனை திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் சண்முகவடிவு பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நடந்த ரத்த பரிசோதனை முகாமினை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.தங்கவேல் தொடக்கி வைத்தார். இந்த முகாமில் 79 பேருக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான், மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எம்.சண்முகம், அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் கே.என்.விஜயகுமார், கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், கே.என்.சுப்பிரமணியம், கண்ணன், ராஜேஷ்கண்ணா. கண்ணபிரான், யுவராஜ்சரவணன், ரத்தினகுமார், அசோக்குமார், பரமராஜன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பிக்-பஜார் துணை மேலாளர் தேவராஜ் நன்றி கூறினார். 

0 comments: