Sunday, September 21, 2014

On Sunday, September 21, 2014 by Unknown in ,    


இலங்கை அதிபர் ராஜபக்சே ஐ.நா.வில் உரையாற்றுவதைக் கண்டித்து, திமுக வரும் 25 ஆம் தேதி நடத்தும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் என்று தொல். திருமாவளவன் கூறினார்.
 
இது குறித்து தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
“மனித உரிமை மீறல் குற்றத்துக்கு ஆளாகியுள்ள ராஜபக்சே ஐ.நா.வில் செப்டம்பர் 25 ஆம் தேதி பேச உள்ளார். ஐ.நா.வில் அவர் உரையாற்றுவது, சர்வதேசப் புலனாய்வு விசாரணை நடத்துவதற்கு தடையாக இருக்கும்.
 
எனவே, ராஜபக்சே பேசுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று இந்திய அரசு உடனடியாக வலியுறுத்த வேண்டும். இதை வலியுறுத்தி செப்டம்பர் 23 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மேலும் செப்டம்பர் 25 ஆம் தேதியை தமிழர்கள் துக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
 
கருப்புச் சின்னங்கள் அணிவது, கருப்புக் கொடிகளை ஏற்றுவது போன்ற வகையில் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் டெசோ அமைப்பின் தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்தப் போராட்ட அறிவிப்பை வரவேற்று ஆதரிப்பதுடன் கருப்புக் கொடி ஏற்றுவது, கருப்பு ஆடை அணிவது ஆகிய நடவடிக்கைகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்“ இவ்வாறு  அவர் தெரிவித்துள்ளார்.

0 comments: