Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
திருவொற்றியூர் : திருவொற்றியூர் சுனாமி அரசு மருத்துவமனையில், கடந்த நான்கு மாதங்களாக, வலி நிவாரண மருந்தான, 'ஜெல் ஆயின்மென்ட்' கிடைக்காமல், நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

திருவொற்றியூரில், சுனாமி நிவாரண திட்டத்தில், அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இரண்டு மாடிகள் கொண்ட அந்த மருத்துவமனையில், மகப்பேறு மற்றும் பொது சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.அங்கு, தினசரி, 600 முதல் 700 பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.கடந்த நான்கு மாதங்களாக, உடல் வலியால் அவதிப்படும் முதியோருக்கு வழங்கப்படும், வலி நிவாரண மருந்தான, 'ஜெல் ஆயின்மென்ட்' இருப்பு இல்லை.இதனால், நீண்ட தொலைவிலிருந்து வரும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.'ஜெல் ஆயின்மென்ட்' மருந்தை, தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

0 comments: