Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
ரகசிய வாக்குமூல
ம் வாங்குவதாக கூறி, சிறுமியை தனது கோர்ட்டு சேம்பரிலேயே ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கற்பழித்ததாக புகார் எழுந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமாக நடப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் புகார் செய்தன. இப்போது ஒரு ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டே கோர்ட்டில் உள்ள தனது சேம்பரிலேயே சிறுமியை கற்பழித்துவிட்டதாக அந்த சிறுமி புகார் கொடுத்திருக்கிறார்.
உத்தரபிரதேச மாநிலம் அசம்காரில் ஒரு சிறுமி தன்னை சிலர் கடத்தி கற்பழித்துவிட்டதாக சில மாதங்களுக்கு முன் புகார் கூறியிருந்தாள். இது தொடர்பான வழக்கு அசம்கார் கூடுதல் தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
மாஜிஸ்திரேட்டு அந்த சிறுமியிடம் ரகசிய வாக்குமூலம் பெறுவதற்கும், அதனை கேமராவில் பதிவு செய்யவும் முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து அந்த சிறுமியும் அவருக்கு துணையாக அந்த பெண்ணின் சகோதரரும், ஒரு பெண் போலீஸ்காரரும் மாஜிஸ்திரேட்டு சேம்பருக்கு வந்தனர்.
மாஜிஸ்திரேட்டு சிறுமியின் சகோதரரையும், பெண் போலீசையும் சேம்பரை விட்டு வெளியே செல்லுமாறு கூறினார். பின்னர் தனியாக இருந்த அந்த சிறுமியை சேம்பரிலேயே அந்த மாஜிஸ்திரேட்டு கற்பழித்தார். பின்னர் இங்கு நடந்தது பற்றி வெளியே சொன்னால், உன்னை ஜெயிலுக்கு அனுப்பி உன் வாழ்க்கையையே அழித்துவிடுவேன் என்று மிரட்டினார்.
பின்னர் அந்த சிறுமி இதுகுறித்து எழுத்துமூலம் புகார் செய்தார். போலீசார் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இந்த பிரச்சினையை அசம்கார் வக்கீல்கள் சங்கம் கையில் எடுத்தது. வக்கீல் சங்கம் சிறுமியின் புகாருடன் மாவட்ட நீதிபதிக்கு, சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அசம்கார் வக்கீல் சங்க தலைவர் விஜய் பகதூர் கூறும்போது, ‘‘அந்த புகாரின் அடிப்படையில் மாஜிஸ்திரேட்டு மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக புகாரின் நகலை மாவட்ட நீதிபதி ஐகோர்ட்டுக்கு அனுப்பியுள்ளார். என்ன நடந்தாலும் இந்த பாதக செயலை செய்த மாஜிஸ்திரேட்டு மீதும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய மறுத்த போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் நாங்கள் ஓயமாட்டோம்’’ என்றார்.

0 comments: