Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
மலேசியாவில் உள்ள பினாங் கடற்கரை, சுற்றுலா பயணிகளை ஈர்க்கக் கூடியது. அங்கு கூடிய ஒரு கும்பல், நிர்வாணமாக பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டது. தொடர் ஓட்டம், நடனம், உடலில் ஓவியம் தீட்டுவது என கேளிக்கைகளில் ஈடுபட்டது. இதற்கு மலேசியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பாரம்பரிய முஸ்லிம்கள் மட்டுமின்றி, இதர மதத்தினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த கேளிக்கையில் ஈடுபட்ட 5 மலேசியர்களையும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஒரு மாதம் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. மேலும், ரூ.96 ஆயிரம் அபராதம் விதித்தது. மேலும், 4 பேர் மீது விசாரணை நடத்தவும் முடிவு செய்தது.

0 comments: