Sunday, September 28, 2014

On Sunday, September 28, 2014 by Unknown   

தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் (TUJ) -ன் விருதுநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம் 28.09.2014 காலை 10 மணி அளவில், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட �TUJ தலைவர் ஜனசக்தி நிருபர் s.பழனிக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் கு.வெங்கட்ராமன் வரவேற்பு உரை நிகழ்த்த மாவட்ட செயலாளர் m.சடையப்பன் முந்நிலை வகித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நவம்பர் 8 தேதி குற்றாலத்தில் 14வது மாநில மாநாடு நடத்த முடிவு செய்ய பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் தினமணி நிருபர் கோ.ஜெயக்குமார் அவர்களுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கபட்டதை குறித்து மாநில தலைவரால் பாராட்டப்பட்டது. மாநில தலைவர் டி.எஸ்.ஆர் . சுபாஷ். பேசுகையில், "ஒருவர் சமூகத்திற்காக ஆசிரியராக பணி புரிவது பெரிய பேறு, பத்திரிகையாளராக பணி புரிவது அதைவிட பெரிய பேறு. இந்த இரண்டும் கலந்த ஒரு சிறந்த நபராக அதாவது ஆசிரியராகவும் பத்திரிகையாளராகவும் விளங்கி கொண்டிருக்கும் தோழர்.ஜெயக்குமார் அவர்களுக்கு அகில இந்திய அளவில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும், அதற்கான விழாவை நம்முடைய TUJ சங்கமே நடத்த வேண்டும்" என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் இவ்விழாவில் TUJ அமைப்பு செயலாளர் நெல்லை G.பரமசிவம், �S.K.ராஜேந்திரன், சக்திவேல், ராஜா, J.பரமசிவம், M.திருமூர்த்தி, N.பாலமுருகன், P.மணிகண்டன், கார்த்திக் ராஜா, M.கார்த்திகேயன், J.செந்தில்குமார், பிரபாகரன், சிவா, M.ஜெயராஜ், L.முருகன், திலீபன், மணிகண்டன், M.கண்ணன்,  கேப்டன் செந்தில்குமார், �V.சரவணன், தீக்கதிர் முத்துகுரி உட்பட விருதுநகர் மாவட்ட பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
தீர்மானம் 1.
இந்த கூட்டத்தில் மறைந்த விருதுநகர் மூத்த பத்திரிகையாளரும் TUJ ன் பொது செயலாளருமான சுந்தர்ராஜன் அவர்களின் மறைவிற்கும், ஆனந்த முரசு J.ராஜா மற்றும் தினபூமி நிருபர் கமலநாதன் ஆகியோரின் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தீர்மானம் 2.
ஆதித்தனார் அவர்களின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு மூத்த பத்திரிகையாளர்களுக்கு ஆண்டுதோறும் அவருடைய பெயரில் விருதுகள் தருவது என முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 3.
TUJ ன் கோரிக்கையை ஏற்று 24மணி நேரத்தில் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்து வந்த சென்னை மாநகராட்சியின் சூளை ராட்லர் தெருவில் இருந்த TUJ ன் பழைய தலைமை அலுவலகத்தை சீல் வைத்து, போலியான நிர்வாகிகளை வெளியேற்றிய சென்னை மாநகர மேயருக்கு TUJன் நிர்வாக குழு நன்றி தெரிவித்து கொண்டது.
தீர்மானம் 4.
மறைந்த தலைவர் டி.எஸ்.ஆர். -ன் பெயரில் ஒதுக்கப்பட்ட பழைய அலுவலக கட்டிடத்தை தலைவரின் வாரிசும், அகில இந்திய தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட TUJ ன் மாநில தலைவருமான டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்களுக்கு பெயர் மாற்றம் செய்து முறையாக சங்கத்தை அதே இடத்தில் நடத்த நிலுவை தொகையில் சலுகை அளித்து உதவ வேண்டும் என மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்தது.
தீர்மானம் 5.
குற்றாலத்தில் நவம்பர் 8ல் நடைபெற இருக்கும் 14வது மாநில மாநாட்டிற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனைத்து பத்திரிகையாளர்களும் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

-செய்தி
உதயகுமார்

0 comments: