Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by Unknown in ,    
 
 
 மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இவ்வாண்டு இரண்டு பெரிய விமான விபத்துக்களை சந்தித்தது. இவ்விபத்தால் 500-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் டிக்கெட் விற்பனை பெரும் சரிவை நோக்கிச் சென்றது
 
 
இதனால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர புதிய யுக்திகளைக் கையாண்டது மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம். கட்டணம் அதிரடியாகக் குறைக்கப்பட்டது. மேலும் பல சிறப்புச் சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன.
 
ஆஸ்திரேலிய நிறுவன விற்பனையைப் புதுப்பித்து அந்நாட்டு முகவர்களுக்கு கமிஷன் தொகையை தாராளமாகத் தந்தது. மேலும் அந்நாட்டுப் பயணிகளுக்குச் சலுகையாக 'மை அல்டிமேட் பக்கெட் லிஸ்ட்' என்ற தலைப்பில் புதுவிதமான போட்டி ஒன்றை அரங்கேற்றியது.
 
இதில் பயணிகள் தாங்கள் செல்ல விரும்பும் இடம் மற்றும் அதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஐபேட் அல்லது விமான டிக்கெட் பரிசாக வழங்கப்படும் என மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது. இதில் பக்கெட் லிஸ்ட் என்றால் ஒருவர் இறப்புக்கு முன் பார்க்க அல்லது செய்ய விரும்பும் செயல்களைப் பிரதிபளிப்பதாகும்.
 
இரண்டு விபத்தை சந்தித்த இந்நிறுவனம் இதுபோன்று போட்டியின் தலைப்பை வைத்தது  பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கியது. பின் இந்நிறுவன இணையத்திலிருந்து அப்பெயர் நீக்கப்பட்டு பயணிகள் செய்ய விரும்பும் செயல் என மாற்றி அமைக்கப்பட்டது.

0 comments: