Saturday, September 06, 2014

On Saturday, September 06, 2014 by farook press in ,    
சென்னையில் துணை நடிகரை பாலில் விஷம் கலந்து கொடுத்து படுகொலை செய்த துணை நடிகையை எட்டு மாதங்களுக்கு பிறகு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி அருகே உள்ள பரப்பாடியைச் சேர்ந்தவர் ரொனால்ட் பீட்டர் பிரின்ஸ்சோ (36). மெக்கானிக்கல் என்ஜினீயர். ரொனால்டு தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தினார். இந்த தொழிலை இவரும் இவரது நண்பர் உமாசந்திரன் என்பவரும் கவனித்து வந்தனர். இதில், நஷ்டம் ஏற்பட்டதால், ரொனால்டு ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட சென்னை வந்தார். சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் தங்கி யிருந்தார். அவர், கொக்கிரகுளம், நெல்லை மாவட்டம் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். இந்நிலையில், பெங்களூரைச் சேர்ந்த சினிமா துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகாவுடன் ரொனால்டுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் மதுரவாயல் எஸ்ஆர்எஸ் நகரில் வீடு எடுத்து கணவன் மனைவியாக தங்கினர். இந்நிலையில், ரொனால்டுக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால், இவர்களுக்கு இடையில் அடிக்கடி சண்டை வந்தது.
இந்நிலையில் ரொனால்டை காணவில்லை என்று சந்திரலேகா கூறினார். இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது அண்ணன் ஜஸ்டின் பிரின்ஸ்சோ பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஜனவரி 1ம் தேதி தனது சகோதரரை காணவில்லை என்று புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 12ம் தேதி ஸ்ருதி சந்திரலேகாவும் ரொனால்டுவை காணாவில்லை என்று மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து அவரும் தலைமறைவானார். இதைத் தொடர்ந்து போலீசாரின் தீவிர விசாரணையில் ரொனால்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலையை ஸ்ருதி, உமா சங்கர் இருவரும் கூட்டாக கூலிப்படை வைத்து செய்தது தெரிய வந்தது, இதைத் தொடர்ந்து கொலை தொடர்பாக பாளையங்கோட்டை செட்டி குளத்தை சேர்ந்த ஆனஸ்ட் ராஜ், சாந்தி நகரை சேர்ந்த காந்திமதி, ரபீக் உஸ்மான் கனி, ஜான் பிரின்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த மே 12ம் தேதி ரொனால்டு சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.இந்நிலையில், 8 மாதம் தலைமறைவாக இருந்த ஸ்ருதி சந்திரலேகாவும் நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை கொடுத்தார் நடிகை வாக்குமூலம்
ரொனால்டும், நெல்லை டவுனை சேர்ந்த உமா சந்திரன் என்பவரும் நண்பர்கள். இவர்கள் 2 பேரும் சேர்ந்து ஆன்லைனில் வியாபாரம் செய்து வந்தனர். அப்போது, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை பிரின்ஸ்சோவிடம், உமா சந்திரன் கேட்டார்.ஆனால் அவர் தரமுடியாது என்று மறுத்தார். இதனால் அவர்களுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்டது. பிரின்ஸ்சோ, உமா சந்திரனின் தொடர்பை துண்டித்தார். அவருடன் பேசுவதை முற்றிலும் தவிர்த்தார். அதன் பிறகு பிரின்ஸ் சினிமாவில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தார். இந்நிலையில் கடந்த 2012ல் சேலத்தில் வைத்து ரொனால்டு என்னை சந்தித்தார். எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் கணவன் மனைவியாக தனி வீட்டில் தங்க ஆரம்பித்தோம். அப்போது, பிரின்ஸ் வேறு பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்தார். மேலும், வேறு சில ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுடன் செக்ஸ், குரூப் செக்ஸ் வைத்துக் கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்தினார். இது எனக்கு பிடிக்கவில்லை. இதனால், அவரிடம் அடிக்கடி சண்டையிட்டேன். தொடர்ந்து எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட வண்ணம் இருந்தது. இதைத் தொடர்ந்து பிரின்ஸ் சோவை முற்றிலுமாக வெறுக்க ஆரம்பித்தேன்.இதை அறிந்த உமா சந்திரன், என்னை தொடர்பு கொண்டார். ரொனால்டு என்னையும் ஏமாற்றி விட்டார். உன்னையும் ஏமாற்றி விட்டார். எனவே, அவரை விட்டு வைக்க கூடாது. தீர்த்து கட்டிவிட வேண்டியதுதான் என்று உசுப்பேற்றினார். நானும் அவர் மீது தீராத ஆத்திரத்தில் இருந்ததால் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டது.
அதன்படி கடந்த ஜனவரி 18ம் தேதி பிரின்ஸ் வீட்டில் இருந்தார். அவரிடம் நைசாக பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன். பாசமாக இருப்பதுபோல் நடித்தேன். இதை அவர் நம்பிவிட்டார். தொடர்ந்து பாலில் விஷம் கலந்து கொடுத்தேன். சிறிது நேரத்தில் மயங்கினார். இதைத் தொடர்ந்து தயாராக இருந்த உமா சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் பிரின்ஸ்சோ கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.இதைத் தொடர்ந்து உமா சந்திரன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் பிரின்ஸ்லேவிடம் இருந்த ரூ.75 லட்சம், கழுத்தில் அணிந்து இருந்த 14 சவரன் தங்க சங்கிலி, கையில் அணிந்து இருந்த வைர மோதிரம் ஆகியவற்றை எடுத்து கொண்டனர். பின்னர், பிரின்ஸ்சோவின் உடலை காரில் ஏற்றி பாளையங்கோட்டைக்கு அனுப்பி வைத்தனர். காரில் உமா சந்திரன் கூட்டாளிகள் 2 பேர் வந்தனர். அவர்கள் ஏற்கனவே பாளையங்கோட்டையில் தன்னுடைய நண்பர்களுக்கு தகவல் கொடுத்து ஆசீர்வாத நகரில் குழி தோண்டி தயாராக வைத்திருந்தனர். அந்த குழியில் பிரின்ஸ்சோ உடலை போட்டு புதைத்தனர்.
இது நடந்து சில நாட்கள் கழித்து ரொனால்டின் சகோதரர் ஜஸ்டீன் பிரிட்டோ நெல்லையில் இருந்து சென்னைக்கு கார் மூலம் சென்று கொண்டு இருந்தார். மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே சென்ற போது பிரின்ஸ்லேவின் கார் நின்று கொண்டு இருந்தது.அந்த காரில் கொலை செய்ய உதவிய நண்பர் ஒருவர் இருந்தார். அவரிடம் இந்த கார் உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்று கேட்டார். அதற்கு அவர், உமா சந்திரன் என்பவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பேசி ரூ.1 லட்சம் முன் பணம் கொடுத்து வாங்கி இருக்கிறேன் என்று கூறினார்.ஏற்கனவே பிரின்லேவுக்கும், உமா சந்திரனுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததை அறிந்த ஜஸ்டின் பிரிட்டோவுக்கு சந்தேகம் வந்தது. அதன் பின்னரே ஒவ்வொருவராக சிக்கினோம். என்னை போலீசார் கைது செய்துவிடக்கூடாது என்பதற்காக பெங்களூரில் பதுங்கினேன். அங்கு வந்தும் போலீசார் என்னை கைது செய்து விட்டனர் என்று ஸ்ருதி கூறி கதறி அழுததாக போலீசார் தெரிவித்தனர்.
ஏற்கனவே, திருமணமானவர்
ஸ்ருதியின் பூர்வீகம் பெங்களூர். இவருக்கு 16 வயதில் மஞ்சுநாத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தேவனஹள்ளி, பார்வட புறா போன்ற கன்னடப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். பின்னர், ரொனால்டை திருமணம் செய்து அவருடன் குடும்பம் நடத்தி உள்ளார்.

0 comments: