Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by Unknown in ,    
தமிழ்நாட்டின் இரண் டாவது பெரிய நகரமும், தென் மாவட்டங்களின் தலைமையிடமாகவும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை படைத்த பரபரப்பான மதுரை மாநகரில் ரயில் நிலையத்தில் நடை மேடைப் பகுதிக்கு செல் லும் முன்  ரயில் வரும், போகும் நேரங்களை ஒளிபரப்பும் தொலைக் காட்சிப் பெட்டிகளில் தெரியும் திரைகளில் தமிழ் மொழியில் ஒளிபரப் பில்லாமல் பல மாதங் களாக இந்தியிலும், ஆங் கிலத்திலும் மட்டுமே காண்பித்துக் கொண்டி ருக்கிறார்கள்.
தென்பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே மேற்கொள்கின்றனர். அதிக அளவில் இந்தப் பகுதியில் விரைவு வண்டி அல்லாத பாசஞ்சர் வண்டி என்று சொல்லப் படும் ரயில்களையே அம்மக்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். இவர்களில் பெரும்பா லான மக்களுக்கு ஆங்கில மொழி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்திக்கும் இவர்களுக்கும் தொடர்பே யில்லை. இதனை அங்கே கண்கூடாக உணர முடி கிறது. அந்த மக்கள் யாரிடமாவது எந்த வண்டி எந்த நடை மேடை என் பதைக் கேட்டு விட்டு அந்த வண்டியை நோக்கி ஓடுகிறார்கள்.
இந்த அவல நிலையைப் பற்றி புகார் அறையில் வினவிய பொழுது அங்கிருந்த ரயில்வே துறை ஊழி யர்கள் இந்த டி.வி டிஸ் பிளே காட்டும் பணியை எல்லாம் பாலக்காட்டில் உள்ள ஒரு கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களிடமே நாங்களும் பலமுறை கூறிவிட்டோம், அவர்கள் அதை பொருட் படுத்துவதாக இல்லை என்று கூறினர்.
இதனை நாங்கள் நாளை எங்களது பத்திரிக் கையான விடுதலையில் வெளியிடுவோம் என்று சொன்னவுடன் அந்த ஊழியர்கள் உடனே ஓடிச்சென்று மேலதி காரியை அழைத்து வந் தனர். அவர் நம்மிடம் இப்பொழுது இந்த பாலக்காட்டு கம்பெனி யின் ஒப்பந்தம் முடிந்து விட்டது. நாங்கள் தான் அந்தப் பணியை செய்ய வேண்டும். இப்பொழுதே தமிழில் ஒளிபரப்பும் பணியைச் செய்கிறோம் என்று சொன்னார்.
உடனே செய்யுங்கள். சென்னையிலெல்லாம் தமிழில் மின்னணுத் திரையில் காண்பிக்கும் பொழுது சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை யில் ரயில் நிலையத்தில் தமிழை இல்லாமல் செய்கிறீர்களே என்று நாம் சொன்னவுடன் உடனே சரி செய்யச் சொல்கிறேன் என்றார்.
அங்கு கூடியிருந்த மக்களில் ஒருவர், நான் தினமும் வந்து செல் கிறேன், ஆனால் ஒரு நாள் கூட தொலைக்காட்சித் திரையில் தமிழில் காட் டியதேயில்லை என்றார். சிறிது நேரத்தில் மின் தடை ஏற்பட்டது. அதன் பிறகு மீண்டும் மின்சாரம் வந்தபோது மின்னணுத் திரை ஒளிபரப்பே நின்று போனது. இனி மேலாவது தமிழிலும் ஒளிபரப்பு கிறார்களா என்பதைப் பார்த்துவிட்டு அடுத்தக் கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள கழகம் காத்துக் கொண்டிருக்கிறது.

0 comments: