Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by Unknown in ,    
மதுரை மாநகராட்சி பொறியாளரிடம் தன்னை உளவுத்துறை அதிகாரி என அறிமுகப்படுத்தி விசாரிக்க முயன்றவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 மதுரை மாநகராட்சியில் பொறியாளராக இருப்பவர் மதுரம். இவரிடம் திங்கள்கிழமை குஜராத் மாநிலம், ஆமதாபாத் பகுதியைச் சேர்ந்த லலித்போலோட்டியா (59) என்பவர் வந்துள்ளார். அவர் தன்னை ஐபி அதிகாரி என அறிமுகம் செய்துள்ளார்.   மாநகராட்சிப் பொறியாளர் குறித்து ஏராளமான புகார்கள் வந்திருப்பதாகவும், அதனடிப்படையில் விசாரணை நடத்தவேண்டும் எனவும் கூறியுள்ளார்.  இதேபோன்று ஆணையர் கதிரவனிடமும் லலித்போலோட்டியா தன்னை அறிமுகத்தியுள்ளார். அவரது செயல்பாட்டில் சந்தேகமடைந்த மாநகராட்சி பொறியாளர் உள்ளிட்டோர் தல்லாகுளம் போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
  தல்லாகுளம் போலீஸார் மாநகராட்சி அலுவலகம் வந்து லலித்போலோட்டியாவை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு நடந்த விசாரணையில் லலித்போலோட்டியா, வாஸ்து சாஸ்திரம் பார்ப்பவர் எனத் தெரியவந்தது. அதன்பின் அவரைக் கைது செய்ததாக போலீஸார் கூறினர்.
  மதுரை மாநகராட்சியில் கடந்த திமுக ஆட்சியிலும், அதைத் தொடர்ந்தும் அதிகாரிகள் சிலர் விதிமீறி செயல்படுவதாக புகார்கள் எழுகின்றன.  இந்நிலையில் பொறியாளரையே மத்திய அதிகாரி என்ற பெயரில் விசாரணை நடத்த முயன்றிருப்பது மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: